நவீனத்துவம் ?/ Modernism?

நவீனத்துவம் ? பத்தொன்பதாம் நூற்றாண்டிருதி வருடங்களிலிருந்து 1960கள் வரையில் நீடித்திருந்த மேற்கின் இலக்கிய மற்றும் கலையுலக புத்துருவாக்கங்களைக் குறிப்பதற்காக “மாடர்னிஸம்” என்கிற நவீனத்துவம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மேலோட்டமாய் தெரிவதை விட சிக்கல் அடர்ந்ததும் திறந்த முனை கொண்டதுமாய் இருக்கிறது. இதன் அடிப்படைக் குணாம்சங்களாய் இருப்பவை தவிர்க்க இயலாதவற்றில் நம்பிக்கையும், மானுட பாரம்பரியங்களின் விரும்பத்தக்க காலாவதியாதலும். மனிதனைப் பற்றியும் மானுடத்தன்மை பற்றிய கருத்துருவாக்கல் பற்றியுமான வேகமான மாறுபாடுகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். கருத்துருவாக்கல் என்ற […]

Rate this: