Janos Pilinisky’s poetry-A sample

Image

 

 

 

 

 

 

 

 

 

 

Janos Pilinisky

 

நவீன ஹங்கேரியக் கவிஞர்(1921-1981)

ஒரு டையரிக் குறிப்பு

இன்றைக்கு என்ன கிழமை?
நான் வாழும் விதத்தில்
காலத்தின் அட்டவணைகளைக்
குழப்பிக்கொண்டே இருக்கிறேன் தொடர்ந்து
‘திருடர்களைப் போல’
சைமன் வீலின் அற்புதச் சொற்களில்
‘காலம் மற்றும் வெளியின் சிலுவையில்
மானுடர் நாம் அறையப்பட்டுள்ளோம்’
நான் கவனம் திரும்புகிறேன்
வெடிகுண்டு சிதறல்கள் என்னை அதிர்ச்சியூட்டுகின்றன
அதுபோன்ற சமயங்களில்
நான் இந்த உலகைக் காண்கிறேன்
ஊடுருவும் கூர்மையுடன்
என் தலையைத் திருப்புகிறேன்
நீயிருக்கும் திசையில்.

Translated from English by Rajaram Brammarajan

Advertisements