Brammarajan’s Polyphonic poems

A unique blog about Tamil poetry and Tamil culture, with translations in English

Posts Tagged ‘views on Music’

நெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்-பகுதி/2/Interview with Neyveli Santhanagopalan-Part-II

Posted by brammarajan on December 19, 2008

நெய்வேலி சந்தான கோபாலன்  நேர்காணல்-பகுதி-2


பி.ரா: நீங்க silence பத்தி சொன்னீங்க. பாடறது ஒரு  extreme ல நாம silent ஆயிடறோம். அதை John Cage கற ஒருத்தர் பண்ணிடறார். தகவலா இதை சொல்றேன். John Cage, modern composers ல ஒரு முக்கியமான composer.  அவர் ஒவ்வொரு composition ஆ சொல்லிட்டு, இன்னிக்கு ஒரு புது composition பண்ணியிருக்கேன் அப்படிங்கறான், 4. 53 அந்த composition பேர். Audience எல்லாம் காத்திட்டிருக்காங்க, ஒரு பியானோ மேடைல இருக்கு. எல்லோரும் சைலன்ட்டா இருக்காங்க. இந்தப் பக்கம் entrance லேயிருந்து ஒருத்தன் வரான். வந்து பெரிய நமஸ்காரம் பண்ணிட்டு ரொம்ப நேரம் நின்னுக்கிட்டேயிருக்கான்.எதுவும் நடக்கவேயில்ல. Audience நின்னுக் கிட்டேயிருக்கு. எல்லாம் சப்தமே இல்லாம கப்சிப்னு இருக்காங்க. 4 நிமிஷம் 53 செகண்ட். அவன் அந்த பக்கம் வெளிய போயிடறான். அவ்வளவுதான் முடிஞ்சு போச்சுங்கறான். ஜென் புத்த தத்துவத்துக்கு மாறின பிறகு அந்த சைலன்ஸுக்குப் போயிட்டான் அவன். அதுக்கு முன்னாடி எலக்ட்ரிக் பியானோவை சிம்ஃபனில introduce பண்றான். நடுவில metal sounds வச்சு, இந்தப் பியானோ போடற சத்தம் எனக்குப் பத்தல இன்னும் வலுவாக் கொடுக்கனும் சொல்லி, அப்படி பண்ணிட் டிருந்த ஆள் கடைசில 4.53 நடத்திக் காட்டறான். so இந்த  ஒரு extreme, ஒரு artist-க்குள்ள நடக்கலாம். இத ஒரு கட்டுரையா எழுதியிருக்கேன்.

ச.கோ: அமீர் கான் பத்தி சொல்வாங்க, when he sang he never disturbed the silence…

ரா.கோ: 80களில நான் டெல்லில படிச்சிட்டிருந்தபோது, சிரிஃபோர்ட் ஆடிட்டோரியத்தில இரவு 8, 9 மணிக்குக் கச்சேரி ஆரம்பிச்சா காலைல 5, 6 மணிவரைக்கும் போகும். நம்ப ஊர்லேருந்து  எல். சுப்பிரமணியம், எல்.சங்கர், எல்லாம் வருவாங்க. கேட்டிருக்கேன். இங்க நம்ம கச்சேரிகள்லாம் எப்படியிருக்குன்னா.. ஒரு 2hours, 3hours ன்னு ஒரு பேக்கேஜ் மாதிரி இருக்கு.

ச.கோ:தம்புராவில ஒண்ணா சேர்ந்துட்டு உள்ள நுழையற தருணம் இருக்கு இல்லையா, அதிலேயிருந்து நேரம்ங்கிறது மறந்து போயிடறது. அதுக்கப்புறம் ஒரேயொரு சிரமம்னா உடல் பொருத்த விஷயம்தான். உடல் எவ்வளவு இடம் குடுக்கறதுங்கறதுதான் விஷயம். அதுதான் தவிர, தம்புராக்குள்ள நுழைஞ்சு நாம மெய் மறக்கிறோம் பாருங்க அந்தத் தருணத்திலேயிருந்து கச்சேரி ஆரம்பிக்கிறது. அதுவரைக்கும் ஒரு ஆயத்தம் தான். அது எப்ப வரும்னு தெரியாது. அந்த ஒரு க்ஷண மெய்மறப்பு.

சமூகம்கிறது எதுவரைக்கும்னா, தனிமனிதன் தன் சுதந்திரத்தை அடையாதவரைக்கும் சமூகத்தை சார்ந்திருக்க வேண்டியிருக்கு. அது ஒரு தேவை.  அதுதான் எல்லாமேங்கிற மாதிரி எல்லாம் வெஸ்டர்ன்ல அப்படி போயிட்டாளோன்னு தோணுது. ம்யுஸிக்லேயிருந்து எல்லாம் சேர்ந்துதான் பாடணும். அதுல தனிமனித சுதந்திரம் எங்க இருக்கு, அப்படிங்கற கேள்வி எனக்குத் தோணும். அது ஒரு பக்கம். அந்த பாதை தானவே ஒரு ப்ராஞ்ச்சா கொண்டு போகும்போது இந்த ஒரு அனுகூலம் இருக்கு. தன்னை இன்னொருத்தரோட கம்பேர் பண்ணிக்கிற ஒரு தன்மை. அப்புறம் where do we stand, இதெல்லாம் தாண்டிபோய் நம்பள  இதுல. . .

ஆனந்: இதுல சுதந்திரமும் இருக்கு பொறுப்பும் இருக்கு.

ச.கோ: அந்த சுதந்திரம் கிடைச்சு அதுக்குள்ள போறதுக்கு நமக்கு ஒரு தகுதியை ஏற்படுத்திண்ட பிறகுதான் இந்த பாதைக்குள்ள மனசு போறது. என்னைப் பொருத்தவரை 35 வயசுலேருந்துதான் நிறைய பேர் சுட்டிக்காட்டி, இந்த பாதைலதான் நீ போகணும்னு சொல்லி என்னை பலப்படுத்தி என்கரேஜ் பண்ணி, அந்த பாதைல நான் போயிண்டிருக்கேன். தகுதியைக் கொடுத்ததல் அந்தப் பாதையில கொண்டுபோய் திருப்பிவிடறதுங்கறேன் நான், என்னோட அனுபவத்தில சொல்றேன். தகுதி இல்லாம போனா என்ன ஆகும்? மொட்ஸார்ட் பத்தி படிச்சிண்டிருந்தேன்.

பி.ரா:அவர் கேரக்டர் ஒரு பெரிய ஜீனியஸ், ஆனா பெர்ஸனாலிடி ஒரு வல்கர் பெர்ஸனாலிடி, இந்த இரண்டும் எப்படி இணைஞ்சுதுன்னு அமெடியஸ் படத்துல மிகப் பிரமாதமா காட்டப்பட்டிருக்கு.

ச.கோ: என்னோட பரிணாம வளர்ச்சி எப்படி போயிண்டிருக்கு உள்ளுக்குள்ளேன்னா, உன்னோட அந்த குணமோ, அந்தக் குறுகின, எல்லாமே ஒரே அழகா pleasant-டா போயிண்டிருந்தாத்தான் உனக்கு ஆனந்தம்னு எனக்கு விதிச்சிருக்கு. உள்ளுக்குள்ள ஒரு முள்ளு உட்கார்ந்து பர்ததுண்டேயிருக்கு. கலை உள்ளுக்குள்ள இருக்குன்னா நீ உன்னை இன்னும் எவ்வளவு refine பண்ணிக்கணும். சில aspects எல்லாம் தேவையா இருக்கு. நீ போய் சரி பண்ணிக்கோ. முழு வளர்ச்சி அடை. ராமர் மாதிரி ஆயிட முடியாது. அவன்தான் அனந்த கல்யாண குணநிலையனா இருந்தான். அது கடவுளால, ஒரு perfect man-னாலதான் முடியும். நம்மாள முடிஞ்ச அளவுக்கு அதை சங்கீதத்துனால பண்ணிக்கணும்னு. இதுல என்ன  ஆயிடும்னா எனக்கு நிறைய பேர் தெரியும் இந்த ஃபீல்டுலேயே, ஒருத்தரைப் பத்தி இப்படி சொன்னாங்க, மேடையில அவர் god இறங்கினா dog. இப்படி இருக்கிறது தப்பில்லை, அவாளையும் ஒத்துக்கணும். அதுவும் ஒரு சிருஷ்டி, அதுக்கு ஒரு காரணம் இருக்கு. என்னால அப்படி இருக்க முடியலைங்கறதுதான் அதுவே என்னோட வீக்னெஸ். சத்யத்தைப் பேசினமா? ஏமாத்தினேமா? இதுவே ஓடிண்டிருக்கு உள்ளுக்குள்ள. பெரிய பிரச்சினை இது. உள்ளூர பயணிக்க ஆரம்பிச்சிட்டாக்கா, ஒரு முழுமை அடைஞ்சுதான் வெளிய வந்தாகணும். திரும்பி பார்த்தோம்னா சரியா வராது.

கே: ஸ்டைல்னு நீங்க என்னிக்காவது, எந்த வயசுல ஒரு முத்திரை பதிக்கணும்னு நீங்க நினைச்சீங்க?

ச.கோ:சேஷகோபாலன் சாரோட கார்பன் காப்பின்னு எழுதினா. முத்திரையும் குத்தினா. music academy-ல, கண்ணை மூடிண்டு கேட்டா அப்படியே சேஷகோபாலன் சார்தான், இப்படி யெல்லாம். அவர்கிட்டயே கொண்டுபோய் காட்டினேன். அப்படித்தான் எழுதுவா. நீ பாட்டுக்கு பாடிண்டிருன்னார். என்ன சொல்றார்னு அப்ப புரியல. பிரமிப்புல ஒரு வித்தையை வாங்கிக்கும் போது,என்ன ஆறது உங்களுக்கு? ஒரு முப்பது பாட்டு ஒரே நாள்ல கத்துண்டேன். இப்ப என்னால முடியாது.  அப்ப mind   அவ்வளவு focussed. அதுக்குத்தான் கடவுள். கடவுள் என்ன சொன்னாலும் வந்துடும் அப்படியே. அப்ப அந்த மாதிரி இருந்தது. இப்ப கீர்த்தனமே வேண்டாம். ஒரு சங்கதில உலகமே இருக்கு, இப்படியெல்லாம் போறது மனசு. அது எந்த அடிப்படைல வருதுன்னா, மீரா சொல்லுவா, “நீங்க இவ்வளவு பேச்சு இவ்வளவெல்லாம் எதுக்குன்னா கச்சேரில ஒக்காத்தி வைச்சா பாட வர்றது, அந்த தைர்யம்தான் உங்களுக்கு. அதுதான் இத்தனை கலாட்டா பண்றேள்”"ன்னு. அதுக்கு ஒரு அஷ்யுரன்ஸ் கிடைச்சாச்சு. அங்க வந்த இதுக்கு ஒரு direction  கிடைச்சாச்சு, அப்படின்னு அதுக்குப் பிரயத்னமே பட வேண்டாம். அது என்னன்னா, அப்போதைக்கப்போ படைக்கிறது. அப்படியே போறோம் இந்த சங்கதிக்குப் பிறகு இது. ஒரு பேச்சாளர் என்ன பண்றார்? ரொம்ப தயார் பண்ணிண்டா போறார்? spontaneity அது கிடைச்சுட்டதுன்னா. . . கிடைச்சுட்டா மட்டும் போதாது ”க்ளிக்” ஆகணும். கேட்கறவாளுக்கு பிடிக்கணுமே.

பெரியவா அனுக்ரகம். அதனால அப்படி  போயிண்டிருக்கு direction. அதுல என்னன்னா. . . அவர் எப்படின்னா, என்னதான் பாடப்போறார்னு தெரியாது. அப்படி புங்காள புங்காளமாக் கொட்டும். ஒரு நாளைக்கு ஒண்ணு சொன்னார் அவர். அவர் பாடிண்டிருந்தபோது, உருகி பாடிண்டிருக்கார்,என் கண்ல ஜலம் கொட்டறது. . . திருப்புகழ் அர்த்தம் அதுதான். “எனக்கு வரமாட்டேங்கறதேடா”ங்கறார்.

ஒன்னே ஒண்ணுக்கு ஆசைப்படுவேன். அதுவேணா உண்மை. ஏன் தெரியுமா? நம்பள விட நம்ம கலை முன்னே நிக்கணும் அப்படிங்கறதுல எனக்கு ரொம்ப ஆசை உண்டு. அது தஞ்சாவூர் சங்கரய்யரைப் பாத்துட்டு வந்து இவ்வளவு பெரிய மகான்  அகந்தை  இல்லாம ஒரு குழந்தை மாதிரி இருந்துண்டு இருக்காரே!  அப்படி இருந்தா தொழில் நடத்த முடியாது.  அது வேற விஷயம். தொழிலுக்குன்னு சிலதெல்லாம் இருக்கு.

பி.ரா: பிழைப்புக்கான தர்மம்னு ஒண்ணு இருக்கே!

ச.கோ: அப்படியெல்லாம் இருக்கு. என்னமோ இன்னிக்கு வரைக்கும் அவர் நிலையை அடைய முடியுமா? அப்படின்னு இருக்கு. இன்னொண்ணு பாருங்கோ, தெரிஞ்சோ தெரியாமலோ, கம்போஸர்ஸ் எல்லாம் யாரைப் பார்த்தாலும், என் மனசே! நீ ஏன் இப்படி வீணாப்போறே? அப்டின்னு மனசுக்குத்தான பாடியிருக்கா! சங்கீதத்தை எல்லாம் தன்னை உயர்த்திக்கத்தானே direct பண்ணியிருக்காங்க! அது ரொம்ப உள்ளுக்குள்ள போறது.

நான் ஒண்ணு சொல்றேன். முரண்பாடா இருக்கலாம். இசை இல்லாமலேகூட ஒருத்தன் ரொம்ப நல்லவனா இருக்கலாம். இசை என்பதே ஒரு நல்ல கலையே தவிர, இசை வந்து அவனோட உணர்வுகள், வாழ்க்கைல இருக்கு. அப்படிப் பார்த்தா, இசைக் கலைஞர்களா இல்லாத எவ்வளவோ பேரை சங்கீதக்காரர்களா பார்க்கறேன். இனிமையான பண்பு, நியாயமான உணர்வோட இருக்கிறவங்க எல்லாருமே சங்கீதக்காரர்கள்தான். பண்படறதுக்குதானே! ”பண் பாடு”ன்னு வைச்சிருக்கான் பாருங்கோ! உங்களுக்குத் தெரியாததை சொல்லல, மனசுல இருந்தததை சொல்றேன்.

ஆனந்த்: ரொம்ப சத்தியமான வார்த்தை.

ச.கோ:இல்லையா?

கேள்வி: ஒரு சங்கதி இப்ப, அப்படின்னு தோணுதுன்னு வச்சுக்குங்க,  ஹிந்துஸ்தானி ம்யுஸிக்ல மணிக்கணக்கா வந்து கச்சேரி. சாஹித்யம் ரெண்டு வரிதான் இருக்கும்..இந்த மாதிரி சாத்தியங்கள் கர்னாடிக் ம்யுஸிக்ல வரக்கூடியதா?உங்களுக்குத் தோணியிருக்கா?

ச.கோ: ராக சங்கீதம்..

கே: இந்த மாதிரி வர வாய்ப்புகள் இருக்கா?

ச.கோ: வாத்யத்துல கேட்கும்போது இந்த கீர்த்தனைன்னு இல்லாம இசையாகத்தானே கேக்கறோம். வாத்ய இசைக்கு கட்டுப்படற யாருமே இசை ரசிகனாத்தான் இருக்க முடியும். இல்லைன்னா, என்னவோ சத்தம். எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுவான். கட்டுப்பட்டுக் கேக்கறான். அப்ப அதுக்குள்ள மரியாதையும் அவனுக்கு ஏதோ பயனையும் குடுத்திடறதுன்னு நிதர்சனமா இருக்கு. அப்ப அந்த வாத்ய சங்கீதம் எல்லாமே ராகம்தான். வாய்ப்பாட்டுல மட்டும்  குறிப்பா நம்ம கர்னாடக சங்கீதம்-நம்ம தென்னிந்திய சங்கீதத்துல வார்த்தைகள் அதிகமா இருக்கு. அதுல என்ன தெரியுமா? சில சங்கீத வித்வான் இருக்கா, வெறும் வார்த்தைதான் இருக்கும் சங்கீதம் இருக்காது. பெரிய சிக்கல் இது. ஹைலைட் பண்ண வேண்டிய விஷயமா இருக்கு இப்ப. ரெண்டு விஷயங்கள் கேள்விப்பட்டேன்.  அலார்மிங்கா இருக்கு. ஒண்ணு, வார்த்தைகளை வைச்சு ஓட்டறது, உள்ளே சாரம் இல்லாம. இன்னொண்ணு, தானே ஸ்பான்சர் பண்ணி பாடறது. அது வந்து தொழிலோட ஒரு இது.  சங்கீதத் துக்கு இது வரப்படாதுன்னு எனக்கு ரொம்ப ஒரு பயம். ஏன்னா, கலைல இப்ப ஒரு soulful இது இருக்கு. நாட்டியத்துல இத வந்துடுத்துங்கறா. நாட்டியத் துறையில இந்த மாதிரி இருக்குங்கறா. பாலசரஸ்வதி சும்மா அப்படியே ஒரு கொசுவம் புடவையûக் கட்டிண்டு வந்து நின்னு ”கிருஷ்ணா நீ பேகனே”ன்னு பாடிட்டுப் போவாளாம். நல்லவேளை, அந்த அம்மாவைப் பத்தி ஒரு டாகுமெண்டரி இருக்கு, ஹிஸ்டரி இருக்கு. அப்ப எல்லோருக்கும் புரியும் இல்லையா, என்னதான் பணம் குடுத்து ஆடினாலும் பாலாவா நீ ஆகமுடியாதுன்னுட்டு. நம்ம சங்கீத்ததுல இன்னிக்கு வரைக்கும் அந்த ஐடியல் உண்டு. நல்லாப் பாடக் கூடியவாளை தானாவே வந்து தேனீ தேனைத் தேடிப் போற மாதிரி மனு வந்து பண்றது. இவா வந்து தன்னைத்தானே உணராத நிலைமைன்னா அது? எங்கிட்ட சரக்கு இருக்குன்னா தேடி வரட்டுமேன்னு ஒரு  இதா இருக்கமாட்டாளோ! என்ன சொல்றீங்க? இல்லைன்னா வேண்டாய்யா. தெரிஞ்சவா வரட்டும் அப்படிங்கற தன்மை வரலைன்னா உன்கிட்ட ரசிக்க ஒண்ணுமேயில்லை, குடுக்கறதுக்கு அப்படின்னு போயிடறது.

பி.ரா:கலை பத்தி ஒரு மேற்கோள். இப்ப சொல்றது தப்பில்லைன்னு நினைக்கிறேன். வால்டர் பேட்டர்-ங்கிறவர் சொல்றார், ”எல்லா கலைகளுமே இசையின் உச்சத்தை அடையவே முயற்சி செய்கின்றன”. அப்படின்னு சொல்லும்போது இப்ப இந்த வார்த்தைகளுக்குன்னு எவ்வளவு மரியாதை குடுக்கறது அப்படின்னு நீங்க சொல்லுங்க. அப்ப வார்த்தைகளைத் தாண்டித்தான் சங்கீதம் இருக்கணும் இல்லையா? கர்னாடக இசையில அதிகமான இடம் கீர்த்தனைக்கோ, கிருதிக்கோ கொடுக்கப்படுகிறது.

ச.கோ: கொடுக்கப்படுகிறது. அதுலயும் ஒரு தராதரம் பார்த்தீங்கன்னா சந்தோஷப்  பட்டுக்கலாம்.. இதை வகுத்து வைச்சவா மும்மூர்த்திகள்னு வச்சிருக்கா. ஞானசம்பந்தர் இவங்களெல்லாம் பார்த்தீங்கன்னா வார்த்தைகள் கம்மியா இருக்கும், compared to ஊத்துக்காடு. ஊத்துக்காடு போல வார்த்தைகளை பொழிஞ்சவா கிடையாது. அருணகிரிநாதரை விடவா? வார்த்தைக்கு அருணகிரிநாதர். நான் எப்பவுமே சொல்லிண்டே இருப்பேன் அவரோட திருப்புகழ். ஆனா சங்கீதத்துல அவருக்கு குடுக்க வேண்டிய ஸ்தானம், சங்கீதக் கச்சேரிகள்ல எங்க வச்சிருக்கான்னு பாக்கணும். ஓரளவு வார்த்தை வேணும் பாவத்துக்காக. அப்படி வச்சிருக்கா,அந்த ஸ்பேசிங்கெல்லாம் கரெக்டா இருந்தாத்தான் எடுத்துண்டிருக்கா. இன்னொண்ணு, மும்மூர்த்திகள் போட்ட கீர்த்தனைகள் எல்லாத்தையும் எடுத்துப் பாடிப்புடல. எது நமக்கு  பொருத்தமா இருக்கோ அது. அவா வெவ்வேறு situationsல பாடியிருக்கா. இப்ப, பஞ்சரத்ன கீர்த்தனைகளை யாரானும் கச்சேரிகள்ல பாடுவாளா? பாடமாட்டாங்க. ரெண்டு காரணம். ஒண்ணு, நீளமானது. இன்னொண்ணு, வார்த்தைகள் ஜாஸ்தி. chorus singingக்கு நன்னாயிருக்கும். ஒரு அர்ச்சனை மாதிரி அது.  ஒரு individual லா ரெண்டு வரியில எடுத்து, ”அப்பாடா! அசைஞ்சுண்டேயிருக்கே, அப்படியே ஒரு இடத்துல நிம்மதியா நின்னு, ஆழ்கடல்ல நீந்தற மாதிரி ஒன்னு சொல்லக் கூடாதா”ங்கறபோதுதான் ரெண்டு நிரவல் பண்றோம், பிடிச்ச இடத்துல. அதுக்கே ஹிந்துஸ்தானிகாரங்க என்ன சொல்றாங்க, உங்களுக்கு நிறைய வார்த்தைகள் இருக்குன்னு. இது ஒரு பெரிய இடைஞ்சலா இருக்கு.

திருமதி மீரா ச.கோ: மத்த வித்வான்கள் மாதிரி எக்கச்சக்கமா கீர்த்தனைகள், இன்னிக்கு ஒண்ணு நாளைக்கு ஒண்ணுன்னு பாடறதுன்னு இல்லை. சங்கராபரணம்னா ஒரு பத்து கீர்த்தனைகள் வைச்சுண்டிருக்கார். இன்னிக்கு என்னப் பாடப் போறார், அந்தக் கீர்த்தனையை இன்னிக்கு எப்படி பாடப்போறார். நேத்து வேறமாதிரி பாடியிருப்பார்.  இன்னிக்கு அதே சங்கராபரணம் வேற மாதிரி பாடுவார்.அப்படி வரச்சே,  எல்லாத்திலேயும் கமகம், plain notesஅதையே திருப்பி திருப்பி, கமகத்தில வார்த்தைகளோடு சேரும்போது, வேறவேற மாதிரி பாடமுடியும். அது கலைஞர்கள் எப்படி உழைச்சு வைச்சிருக்காங்களோ அதேமாதிரிதான் வரும். நேத்து அதே மேடைல அதே சங்கராபரணத்தை வேறமாதிரி பாடியிருப்பார். அதே கீர்த்தனத்தை  structure மாறாம ஒட்டி இன்னும் அழகா present பண்ணுவார். அதுக்காகத்தான் வருவா இவரோட ரசிகர்களெல்லாம். அன்னிக்கு அப்படி பாடினேள் இன்னிக்கு இப்படி இருந்தது,முழுக்க  வித்தியாசமா இருந்தது சார்ம்பாங்க.

பி.ரா:பேகட, தோடி இரண்டும் அவங்களுக்கு(ஹிந்துஸ்தானிகாரர்களுக்கு) இல்ல.

ச.கோ: ஆனா, அமீர்கான் பேகட வர்ணம் ரெகார்ட் கொடுத்திருக்கார் எனக்கு. என்கிட்ட இருக்கு. அமீர்கான் இல்லை கரீம்கான். கர்னாடிக் ம்யுஸிக்கை ஹிந்துஸ்தானி மாதிரி பாடியிருக்கார். ட்ரை பண்ணினாருங்கறதே பெரிசு. அதுவே பெரிய விஷயம்.

பி.ரா: அங்க தோடிங்கறது நம்ப சுபபந்துவராளி. நம்ம தோடி கிடையாது இல்லையா?

ச.கோ: நிச்சயமா கிடையாது. ஆனா, நம்ப பைரவி இருக்கில்லையா? அதுதான் அவங்க தோடி. நம்ம சங்கீதத்தில 3 அம்சம் இருக்கு.  ஒன்னு பிர்கா, இன்னொன்னு அகாரம், இன்னொன்னு கமகம். இந்த மூனையும் குழைச்சு இழைச்சுக் குடுக்கும்போது பலவித வண்ணங்கள் வரது. பிருந்தா முக்தா ஸ்டைல்னு ஒண்ணு இருக்கு. ரொம்ப நன்னாயிருக்கும். ஆனா, கமகம் ஜாஸ்தியா இருக்கறதுனால ஏதோ ரொம்ப இழுக்கற மாதிரி இருக்கும். (பாடிக் காட்டுகிறார்) இப்படி அசைச்சுண்டே இருந்தா கொஞ்ச நேரம் extend ஆகும். ஒரு தூக்கம் வந்துடும். அப்ப சுவாரஸ்யமா ஒரு பிர்கா போட்டா நன்னாயிருக்கும். பிர்காவே ஜாஸ்தியா போட்டோம்னு வைச்சுக்கோங்க, ஏதோ அழகு காட்டற மாதிரி ஆயிடும்.  கிலுகிலுப்பை ஆட்டிக் காட்டற மாதிரி. ஜி.என்.பி. பண்ணுவார். ஆனா, அளவா, அழகோட பண்ணுவார். அவர் பிர்காவை அழகுபடுத்தினார்.

ஆனந்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி கேட்கவே முடியாத மாதிரி இருக்கும். உருண்டு கீழே விழற மாதிரிதான் ஃபீலிங் வரும் எனக்கு. Nothing personal against her..

ச.கோ: மதுரை மணி ஐயர் ஸ்டைல் ரொம்ப நன்னாயிருக்கும். ஆனா,வார்த்தைகளுக்கு ரொம்ப பிராதன்யம் கிடையாது. இவ்வளவையும் கலந்த கலவையா ஒருத்தன் குடுக்கனும்னா,அவன் அஷ்டாவதானியா இருக்கணும்.

பி.ரா: எங்களுக்கு மதுரை மணிஐயர் ஏன் பிடிக்கறதுன்னா, அவர்கிட்ட, ஒரு primal sound,  grunt, ஒரு animal sound ன்னுதான் சொல்ல முடியும். ஆலாபனையிலேயே சில சமயம் எங்கேயோ ஒரு இடத்தில எடுத்து, திடீர்னு த்து..து..து..ம்பார். மறுபடி வேற இடத்தில எடுத்து  வேற மாதிரியா பண்ணுவார்.  இதை ரெண்டு பேர்கிட்டயும் பாக்கறோம், ரொம்ப பிடிச்சது, ராமனாதனையும், அவரையும். சில பேர் கேட்கறாங்க, எப்படி இந்த ரெண்டு பேரையும் ரசிக்கிறீங்கன்னு. எங்களுக்குப் புரியலை, ஒரு இனிமையும் இல்ல-அதாவது எங்களை கேட்கிறவங்க இப்படிக் கேட்கிறாங்க. அவங்ககிட்ட இதையும் மிஞ்சி ஒரு சங்கீதம் இருக்கு. அதனாலதான் அவங்களை பிடிக்குது.

ச.கோ: சங்கீதத்தை நன்னா புரிஞ்சுண்டு பேசணும்னா, இவா ரெண்டு பேரையும் ரசிச்சாகனும். இவாளைத்தான் கேட்பேன்னு கடிவாளம் போட்ட குதிரை மாதிரி இருக்கப்படாது.

ஆனந்:: திருவல்லிக்கேணி ராகவேந்திரா மடத்துல, ராமனாதன் கச்சேரி போயிருக்கேன். மொத்தமே 40 பேர்தான் உட்கார இடம் ஹால்ல. கானடா ராகம் போறது. பாடிட்டு, “என்ன இது! இன்னிக்கு அது கிடைக்க மாட்டேங்கிறதே. இன்னும் ஒரு தடவை பாக்கறேன்.” அப்படின்னுட்டு  “இதுதான்.. இதுதான்… கிடைச்சுட்டது. அப்பா!” ங்கறார். அதை ஒரு இடம் மாதிரி பிடிச்சுக் கொண்டு வந்துடறார். மனசுக்குள்ள இடத்துல எங்கயோ வச்சுட்ட மாதிரி போய் எடுத்துண்டு வரார்.

ச.கோ: Flute மாலி ஒருதரம், “கல்யாணி” ஆரம்பிச்சாராம். 5 நிமிஷம் கழிச்சு “இல்ல இன்னிக்கு உட்டுடறேன். பிக்சர் கிடைக்கல”ன்னாராம்.

ஆன: ஒரு சின்ன 5 மினிட்ஸ் பிரேக் வந்தது. அதில formal-லா அந்த இதை சேர்ந்தவா சுகி எவரோன்னு பாடினா. “நாங்கதான். ஏன் நான் இல்லையா”ன்னார். ரொம்ப இமோஷனல் ஆயிட்டார் அந்த கொஞ்ச நேரத்துல. ரசிகர் ஆயிட்டார் அந்த இடத்துல.

ச.கோ:கேட்கறவாளுக்கு ஒரு சந்தோஷம் இருக்கணும் தவிர பயம் இருக்கக்கூடாது. பாடறவாளும், தன்னைப் பெரிய இதுமாதிரி நினைச்சுக்கக்கூடாது. அடையவேண்டிய இடத்தை  ரெண்டு பேரும் அடையணும். இவர் பாடி அடையணும், கேட்கறவா கேட்கும்போது அடையணும். அந்த ஒரு தன்மை இருந்ததுன்னா, எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது.

பி.ரா: இசையே prejudice -ன்னோட அடிப்படைலதான் இயங்குதுங்கறது என்னோட தாழ்மையான அபிப்ராயம்.

ச.கோ: எப்படி சொல்றீங்க?

பி.ரா: இப்ப என்னுடைய கட்டுரை ஆர்க்யுமென்ட்டிலேர்ந்து வரேன். ஒரு இசையை போட்டவுடனே, “ச்சே..நல்லா இல்லை மாத்து”ங்கறோம். அது வெஸ்டர்னா இருக்கலாம். கர்னாடிக்கா இருக்கனும்னு அவசியம் இல்லை. நாங்க எல்லா டைப் இசையையும் கேட்கறோம். Metal, Jazz, Hard Rock ன்னு கேட்கறோம். ஒரு சிலது போட்டவுடனே, என்னவோ தெரியலை, இன்னொரு தரம் போடு, அது புரியலை, ஒன்னுமில்லை. இன்னொரு தரம் போடுங்கறோம். அந்த மாதிரி கேட்டுத் தெரிஞ்சுக்கறோம்.

அப்புறம் group listening -னால, இசையோட அனுபவ அடர்த்தி கூடுதா? நாம யாரோட கேட்கறோம்கிறது அந்த கேட்கிற ரசனையை பாதிக்கிறதா?

ச.கோ: பாவத்தோட தன்மையே கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்தான். மனுஷாள் கூட கூட, like minded people கூடகூட  கனம் ஏறத்தான் செய்யும், ஜாஸ்தி ஆறது. Multiply ஆறது. அதில சந்தேகமே இல்லை. ஆள்கண்ட சமுத்திரம் அப்படிங்கறா இல்லையா. ஒரு விஷயம் தெரிஞ்சு போச்சு, ஒருத்தன் சந்தோஷம்னு முகத்தைப் பாத்துட்டா இவனுக்குப் பிடிக்கும்னா தானாவே வரது. முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா நாமளே நம்ம ரசிகனாயிருந்தா இன்னொருத்தர் வேண்டாம். அது ஸ்வானுபூதி நிலைமைங்கற மாதிரி இருக்கு கொஞ்சம்.  “உங்களுக்கு வேணுங்கற இடம் வந்துடுத்தோயில்லையா? நீங்க புறப்படலாம்”பாராம் விஸ்வநாத ஐயர்.

பி.ரா: உங்களுக்கு பிரதி மத்யமம் ரொம்ப பிடிக்குமா பாடறதுக்கு? இல்ல ரசிகர்ங்கற முறையில சுத்த மத்யமம் பிடிக்குமா?

ச.கோ: சுத்த மத்யமத்துல ஒரு ஆனந்தம் இருக்கு சார். பிரதி மத்யமம் பிடிக்கும். “கல்யாணி”யெல்லாம் எடுத்துண்டா தன்னை இழந்துடுவேன். சொரூபம் குடுக்கும் பாருங்க!  பொதுவா சுத்த மத்யமம் ஈஸி.

பி.ரா:அதனாலதான் நிறைய பேர் அதை  choose  பண்ணிக்கறாங்களா?

ச.கோ: ஆமா. அப்புறம் chords  இருக்கு. பிரதி மத்யமம்னா சிரமப்பட்டு பிடிக்கணும். அது எங்கேயோ ஒளிஞ்சுண்டிருக்கும். உபசாரம் பண்ணி அழைச்சுண்டு வரணும் . விஸ்வநாத ஐயர் பாடிண்டிருந்தாராம். நடுவில ஒரு அந்நிய ஸ்வரம் வந்துடுத்தாம். ரொம்ப உன்னிப்பா கவனிச்சாத்தான் தெரியும். அவருக்குத் தெரியுமில்லையா?  “இந்த சனியனை யார் கூப்பிட்டாங்க” அப்படின்னாராம். எல்லாரும் பின்னாடித் திரும்பி பார்த்தாங்களாம். அவாள்லாம் எவ்வளவு ஒரு யதார்த்தமா இருந்திருக்கா பாருங்கோ! அதாவது சங்கீதம் நம்பளையும் கவுத்துடும். எப்பவும் ரெடியா இருக்கணும். வரதை அப்படியே ஏத்துக்கணும். Egoless ஆக இருந்தா ஆனந்தமா ரசிக்கலாமே!

பி.ரா: உங்களுக்கு நளினகாந்தி மேல தனி ப்ரீதி உண்டா?  இரண்டு சிடில கேட்டிருக்கேன். நான் அதை அதிகமா கேட்கிறேன், அதனாலதான். once again prejudice தான் சார்.

ச.கோ: நிச்சயமா. ஆனா prejudice அப்படின்னு எல்லாம் இல்லை. சில ராகங்கள்ல நமக்கு புது insight  கிடைக்கிறது.அது trump card மாதிரின்னு சொல்லலாம், கச்சேரி கோணத்துல. என்ன காரணம்னா, வசீகரம். இன்னொண்ணு அதைக் குடுக்கும்போது, அங்கதானே நம்ப ஒரிஜினாலிடி இருக்கு.

பி.ரா: இரண்டும் வித்தியாசமா பாடியிருக்கீங்க. இரண்டு சிடியிலேயும் வேறவேற மாதிரி இருக்கு.

ச.கோ: இப்ப ரொம்ப அதிகமா வித்தியாசமா வருது ஒன்னொண்ணுமே. சம்பந்தமே இல்ல இப்ப. (பாடிக்காட்டுகிறார்). ரசிக்கிறதைவிட அதுக்குமேல ஒண்ணு இருக்கு. இன்னிக்கு இதுதான் வரணும்னு இருக்கு. அப்படி ஒரு நிலைமை. எம்.டி.ஆர் சொன்ன மாதிரி, மனசுல ஒண்ணு இருக்கலாம். வாழ்க்கைலகூட இப்படி வாழணும்னு இருக்கிறதைவிட வந்ததை ஏத்துக்கணும்னு ஒரு தத்துவம் இருக்கே! அந்த தத்துவம் சங்கீதத்திலயும் இருக்கு. உங்களுக்குத் தெரியும், நளினகாந்தி இன்னிக்கு இப்படி போறது. அது என்ன ஆறதுன்ன இப்படி unique ஆ இப்படி காதுலு விழறது. இன்னிக்கு புதுசுன்னுட்டு. Ceativity யோட சூட்சுமம் இதுன்னு நினைக்கிறேன். எதிராளிக்கும், ரசிகனுக்கும் ஏன் நமக்கே “அட! இது புதுசா இருக்கே!”ன்னு தோணறது.அதுலேயிருந்து தப்பிக்கவே முடியாது. If you let yourself flow into that level  அது அப்படித்தான் வரும். சில நாள்ல சினிமாப் பாட்டு சாயலெல்லாம் வரும். கல்யாணி” பாடறப்ப ”மன்னவன் வந்தானடி” வந்து நிக்கும். முதல்நாள் டிவில பேசியிருக்கேன், சினிமா பாட்டெல்லாம் யாரும் கேட்கக்கூடாதுன்னு.  ஆனா அது வந்து நிக்கும். அதது எங்க இருந்தாலும் உள்ள போய் ரெஜிஸ்டர் ஆயிடறது. அது வரவேண்டிய நேரத்துல வேற விதத்துல வந்துடறது. என்ன, அந்த format  மட்டும் மரியாதைக்குரியதா இருக்கணும். கொச்சையா இருக்கக்கூடாது. அதுக்குத்தான் பயப்படறோம். கவசம் போட்டுண்டே பேசிண்டே இருக்கிறது எல்லாம் இதுக்குத்தான். இதுதான் விஷயம். அதுமாதிரியெல்லாம் வரும்.

இந்தப்பாட்டை(மன்னவன் வந்தானடி)கம்போஸ் பண்ணது யாருன்னு கூடத் தெரியாது. கே.வி. மகாதேவனோ, எம்.எஸ் விஸ்வநாதனோ. என்ன அருமையான கல்யாணி தெரியுமா! ஆனா என்னன்னா, எடுத்தவுடனே எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும்னு எடுத்தேன்னா it is not respecting the composer.

ஹிமாத்ரி சுதே. . . (பாடுகிறார்)

அதுதான் உனக்குள்ள ஏற்பட்டது. நீ என்ன கஜல் சிங்கரா? கர்னாட்டிக் பாடகரா? உன்னோட அடையாளம் அதான். classical music னு உன்னை எதுக்கு மதிச்சு வரான்? அடையாளம் ஒண்ணு இருக்கு. அது வேணும். எல்லோருக்கும் உண்டே! நீங்க, identity -ய வைச்சுக்கறதுக்கு உங்களுக்கு உரிமை உண்டே தவிர, எப்ப இழப்பேள்னு சொல்ல முடியாது. அது க்ரியேடிவிடில போகும்போது அது எல்லாம் merge ஆயிடறது. நீ ராகத்துல இணைஞ்சுட்டேள்னா, க்ளாசிகல் கர்னாடிக் பாடிண்டிருக்கியா, ஹிந்துஸ்தானி பாடிண்டிருக்கியான்னு தெரியாது ஒரு ஸ்டேஜ்ல. இப்ப வெஸ்டர்ன் பாடிண்டிருக்கியா? Universal லா, உள்ளுக்குள்ள அந்த உணர்வு படம் போட்டாப்ல சில சமயம் போகும். சில சமயங்கள்ல எப்படி போகும்னா… சில நாள்ல நம்மால இன்னிக்கு வந்து ஏதாவது அனுகூல சக்தி பாட வைச்சாத்தான் உண்டுங்கிற மாதிரி உடல் நிலை, மனோநிலை, சூழ்நிலை எல்லாமே பழிவாங்கறாப்ல இருக்கும். கஷ்டம் வரப்பத்தான் பகவானை நினைக்கிறாப்பல, அப்பத்தான் பகவான் எனக்கு. நாம பண்றதுக்கு இந்த சரீரம் வந்திருக்கு. சிலநாளைக்கு கிரியேடிவ் மூட்ல நம்ப நெனக்கறதுக்கு  முன்னாடி வந்து நிக்கும் பாருங்கோ அப்ப எல்லைகள் எல்லாம் தாண்டி உலகத்தெல்லாம் தாண்டி தேவலோகத்தெல்லாம் தாண்டி போகணும் இந்த சங்கீதத்துல தோணும். இதுக்கெல்லாம் யாரு ஆதாரமா இருக்கவங்க யாரு யூனிவர்சல் ஃபோர்ஸ். இதெல்லாம் வெறும் பாவங்கள்தான். அன்னைக்கு ஒண்ணு கிடைக்குமே தவிர நீ எங்க போனாலும் இயல்புநிலைக்கு வந்துதான் ஆகணும். அது ஆனந்தமான மௌனம். நான் வந்து என்ன பாவங்கள்ல போறதோ அதோட போய்டுவேன். I will let it flow.  ஏனென்றால் இன்னைக்கு இப்படித்தான்னு இருக்கனுன்னு இருக்கறது. சில நாளைக்கு ஆஞ்சநேயர் மாதிரி சேவகனாக பாடிண்டிருப்பேன். சில நாளைக்கு என்னை மாதிரி உண்டான்னு பண்ணிக்கிட்டிருப்பேன். ”பாரு இன்னைக்கு பாரு  இந்த பிக்சர் பாடறது அப்படின்னு. பிக்சர் போட வச்சது எது? அது உள்ளுக்குள்ள ஒண்ணு இருக்கு. இன்னைக்கு கிரியேடிவ்வா உன்னைப் படைச்சிருக்கு. ஒரு நல்லதா. சில நாளைக்கு வராது. வருத்தப்பட்டு பிரயோஜனமில்ல. அப்ப ஒரு பாவம் வேணுமில்லையோ காம்ப்ரமைஸ் பண்ணின்டு வரதுக்கு? சரி வழக்கம் போல ஆபீசுக்கு போற ஒரு ஆள்மாதிரி கச்சேரிக்கு வந்து ஒக்கார்ந்துக்குவோம். இன்னைக்கு கதையை முடிச்சிட்டு போலாம்.

இங்க வீட்ல பார்த்தா ரொம்ப பிரமாதமா இருக்கும். பண்றதெல்லாம். ஏதோ பேசினாரா இன்னைக்கு அப்படி இருக்கும் கச்சேரி, அப்பிடி இருக்கும் கச்சேரின்னு.

அப்படிதான் சார் இருக்கு. தயார் பண்ணின்டு மனசுல வச்சிண்டு போறதே கிடையாது. இது எப்படின்னா இது நாதோபாசனை, இது பெரிய விஷயம் அப்படின்னாக்கூட இது சந்தோஷமான விஷயம். என்னன்னா சொன்னாக்க, எல்லோரும் ஒத்துக்க மாட்டா. பார்த்து சொல்லணும். இந்த ஸ்வரங்களோடு விளையாடுறோம் பாருங்க ஸ்ட்ரோக் கிரிக்கெட் மாதிரி. அதுதான் ஆனந்தத்தையே குடுக்கறது இன்னொண்ணு பார்த்தா இந்த சுதந்திரங்கள்லேயிருந்து பிச்சிண்டு வர்றது கட்டுப்பாட்டிலேயே இருந்தாக்கூட இந்த ரெண்டுந்தான் ஆனந்தத்தையே குடுக்கறது. . .கட்டுப்பாட்லேயே இருந்தாக்கூட.

(பாடுகிறார்)தாட்சாயாயிணி அபயாம்பிகே. . அப்டிங்கும்போது மனசு உருகறது நான் ஒத்துக்கறேன். ஒழுக்கம்னு வரும்போது அது வந்து என்ன பண்றதுன்னா, அது அந்த கம்போஸரோடு மேன்மை. தீட்ஷிதர், அப்பா எப்படி விழுந்து நேர்ல தர்சனம் பண்ணி பாடியிருக்கார். அந்த பாவங்கள் அது தனி. அது பக்தியோட ஒரு பரிணாமம். உள்ளுக்குள்ள ஒரு உணர்ச்சி, அப்படியே கொந்தளிப்பு அப்படீங்கும் போது தீட்ஷிதர் என்ன பண்றார்? இந்த விளையாட்டும் பாவமுந்தான் பக்தி. அதனாலதான் ரொம்ப விளையாட்டாவே போயிண்டிருந்தேன்னா அது போயிண்டேயிருக்கும். அதனால ஒரு நோக்கம் இருக்காதுன்னு, பக்திங்கற வரிகள்லே நம்ம கட்டிப் போட்டா. இல்லையா? அப்ப ஒரு இடத்துல சொல்றார் தியாகராஜசாமி நான் திருவையார்ல ஒக்காந்து பாடிண்டிருக்கேன். என்னோடு பேரு எங்கெங்கெல்லாம் கேள்விப்பட்டு, யாரெல்லாமோ என்னைப் பார்க்க வர்ராங்களே! இந்தக் கடனை நான் எப்படித் தீர்ப்பேன் உனக்கு. நான் பாடல. நீதான்  என்னைப் பாட வைச்சிருக்க ராமா.

(பாடுகிறார்) தாசரதீ . . .

அப்படிங்கும்போது அழுகை வந்து அடுத்த வரி போகவே முடியாது சில சமயம். ஏன்னா அந்தக் கீர்த்தனத்தோட முழு அர்த்தமும் தெரிஞ்சி அவர் என்ன ரூபத்தில பாடினார்னு நீங்க நினைச்சுட்டேள்னா அடுத்த வரி போக முடியாது. அப்படியொரு கட்டம் இருக்கு.

”நீ ருணமு தீர்ப்ப நா” உன் கடனைத் தீர்க்க நா தரமா பக்தி இல்லாத கவிஞர்கள்ளெல்லாம் பாவம் இல்லாத கவிதைகள  போட்டு எல்லோரையும் சிரமப்படுத்துவாங்கங்கிறதுனால, இந்த உலகத்து நன்மைகளையும் அந்த லோகத்து நன்மைகளையும் முக்தியும் கொடுக்கக் கூடிய கீர்த்தனைகளை ”போதிஞ்சந” எனக்கு சொல்லிக் குடுத்த உங்கிட்ட இருக்கற திறமையை நான் தீர்க்க முடியுமா? இவ்வளவு பாவத்தை, அனுபவ கனத்தை வைச்சிண்டிருக்கிற கீர்த்தனத்த நீங்க அவ்வளவு எளிமைய பாடிற முடியுமா? இன்னொரு அய்ட்டம் மாதிரி பாடிற முடியமா?

நிஜத்தில அப்போ என்ன நடக்கறது? தெரிஞ்சோ தெரியாமலோ தியாகராஜர்ட்ட உனக்குள்ள ஒரு ஈர்ப்பு இருக்கு. சின்ன வயசுலர்ந்து ஒரு டெவலப்மெண்ட் பண்ணின்டுட்டார். இல்லன்னா யாரோ போட்ட ஒரு கீர்த்தனத்தை வச்சு நீ ஏன் எதுக்கு உருகணும்? பாலமுரளிசார் நான் போயிருந்தப்போ சொன்னார் என்னப்பா என்னோடு தெய்வத்த எனக்கு தெரிஞ்ச நாலு வார்த்தைகள போட்டு பாடறதுக்கு எனக்கு உரிமையில்லையான்னு. அதை யாரும் தடுக்கல. ஆனா அவர் இருந்த நிலைமை என்ன? ஒரு பரிணாமம் இருக்கில்ல? தியாகராஜர்ன்னா தியாகந்தான். தியாகத்தோடு பெருமை என்னன்னா, தியாகத்தை பண்ணினவருக்கும் தியாகத்த ருசிச்சவனுக்குந்தான் தெரியும். தியாகத்தைப் பத்தி ஒரு போகிகிட்ட போய் கேட்டா என்ன தெரியும்? அவனவனுக்கு அதது சுகம். அவங்களோட உள்ளத்தோட உயர்வுதான் வந்து இடிக்கறது. இசைக்கு மேல வந்து ஏதாவது ஒரு உணர்வு இருக்குன்னா அது வந்து இடிச்சிரும். தடுத்தாட்கொள்றதுங்கற மாதிரி கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே பண்ண முடியாது. ஒருத்தருக்கு நேரா அன்னைக்கு ஃபுல்லா, அந்த ”ஆரா” இருக்கும்.  ஆக, மியூசிக்கோட ஒரு பயன் அப்படின்னு எடுத்தேள்னாக்க இந்த மகான்களோடு உள்ளம், அவங்களோடு உறவாட முடியறதுங்கறது ஒரு பெருமை. பெரியவங்க சொன்னாங்க, பக்கத்து வீட்டுல இருந்தாலும், அந்த வீட்டிலயே அண்ணன் தம்பியாப் பொறந்தாலும்கூட ஜல்ப்பேசனால தியாகராஜர புரிஞ்சுக்க முடியல. அவ்வளவு உயர்ந்த உள்ளம் அந்த வாக்கிலதான் இருக்கு. அதனால நாம அவங்களோட பழகற அந்தப் பெருமை நமக்கு கிடைக்கறது ஒவ்வொரு எழுத்துலையும். அதனால நம்ப சங்கீதத்துல வார்த்தைகளை, அந்த மகான்களோடு நாம உறவாடறதா நெனச்சிண்டு. Atleast you are the minimum representative அந்தப் பாக்கியத்தை நாம் பண்ணியிருக்கோம்னு ஒரு பெருமையோடு பாடினாதான் அதுக்கு ஒரு பலன் ஏற்படுது. இல்லன்னா வெறும் வார்த்தைகள்தான். உயிரற்ற வார்த்தைகள். அப்படியாயிடறது. ”தாசரதி நீ ருனுமதீபன்னு” பாடணும்ன்னா அதுக்கு ஒரு தகுதியிருக்கு. அதுக்கு ஒரு தகுதி சங்கீதத்துனாலே ஏற்படுத்திக்கனும். அரியக்குடி கீர்த்தனத்தை பாடும்போது அந்த முகமே தோடியா மாறிடறது.

(பாடுகிறார்) ஆசதீர. . .

அந்தக் கீர்த்தனை பல்லவிய முடிச்சிட்டு

(பாடுகிறார்) .. …. ….அப்டின்னு பாடுவாராம். ஒண்ணும் இருக்காது. சின்ன அசைவுதான். அந்த அசைவுல அப்படியே முகமே தோடியா மாறிடுச்சு சந்தானம்னு சொல்லுவார். அப்ப அத்தனை ஈடுபாடு. தியாகராஜர் கீர்த்தனைதான் கீர்த்தனம் மத்ததெல்லாம் போக்கிரித்தனம்னு சொல்லுவார்.

ஆனந்: யாரு அரியக்குடியா சொல்வார்?

ச.கோ: அவரோடு ஸ்டேட்மெண்ட் அவரே நிரூபணம் பண்ற மாதிரி அந்த கீர்த்தனத்தை அவ்வளவு ஆசையா பாடுவார். அதுக்குதான் ”சங்கீத சாஸ்திர ஞானமும் சாரூப்பிய சௌக்கியமும்” அதாவது மொதல்ல அது என்ன குடுக்கும்னா நீ யாரப் பாடறயோ அவனோட உருவத்தையே நீ கொள்ளலாமாம். இந்த மாதிரி பாவங்கள் ‘சாரூப்பியம்’ ‘சாலோக்கியம்’ ‘சாகித்யம்’ ‘சாமீப்பியம்’, அந்த தெய்வத்துக்குப் பக்கத்துல போன மாதிரி பாவம் இதெல்லாமே பாவந்தான் ரணமரைப் பொருத்தவரை, அவ்வளவும் பாவம் ”நீ அதுவா ஆகல”. சாமீப்பியம் சாகித்யம் சாரூப்பியம் அந்த நிமிஷத்துக்கு அந்தப் படைப்பாளியிருக்கான். அந்த கடவுள்தன்மையா அது கெடைக்கறது. அதுக்கப்புறம், இறங்கிட்ட டிஓஜிதான். இவன் ஒழுங்கா இருக்கணும்னா அதுல இருந்து தப்பிச்ச வரணும் பிரக்ருதி. ஸோ ஐடியல் லெவல்ல தியாகராஜசாமிய வச்சுக்கலாம். அவர் என்ன பண்ணிட்டார்னா இந்த ராஜசதஸ்ஸுக்கு போனாலே விவகாரம்தான். எதையாவது ஒன்னு சொல்லுவாங்க இந்த வரியையே ஏதாவது இப்படி மாத்திப் பாட முடியுமான்னு ஏதாவது கேப்பான். நிம்மதியா இருக்க விடமாட்டான். ராஜா தங்கத்த  குடுத்து எதையவாது பண்ண முடியுமான்னு பாப்பான். அதையும் ஒரு பாட்டுப் பாடினார், ”நிதிசால சுகமா”ன்னு. நல்லா தெரியும். அவரை மாதிரி டிப்ளோமாட்டிக் யாருமே கிடையாது. அதுல நிம்மதியா இருக்கறதுக்குதான் இவ்வளவும் பண்ணார். ஷியாமா சாஸ்திரி போய் ராஜாவ காப்பாத்திட்டு வந்திருக்காரே! அவரு வெத்தில பெட்டி, புகையில, ஜரிகை வேஷ்டி அப்படி இருப்பாராம். அவரும் பெரிய மகான். நேர சாமிய போயி அடைஞ்சிட்டாராம்., அம்பாளைன்னு சொல்லுவா. இப்படியெல்லாம் இருக்கு. இவ்வளவு கதையும் படிக்கறோம். நம்ம யாரு. அதனால நான் வைச்சேன். பிச்சைக்காரனுக்கு என்ன அடையாளம் இருக்கு? பெரியவா பிச்சைன்னு வைச்சேன். ஏதோ ஒரு அனுக்கிரகம் வந்து நம்மள அழைச்சிண்டு போறதோ அது வந்து கடலிடைப்பட்ட துரும்பா இருக்கா? இல்லன்னா பல்லக்கில வந்து பெரிய துறவிகளை அழைச்சிண்டு போறதோ, விமானத்தல அழைச்சிண்டு போறதோ தெரியாது. ஆனா எதுல பயணிச்சிண்டிருக்கேன்னு தெரியாது. இல்லன்னா ஒரு சங்கீதக்காரன்னு ஒரு அடையாளம் அதுக்கு மேல போக முடியலியே! பர்ஸனலா கேக்காதிங்கா ஸார் அப்டிங்கறா. பர்ஸனலா என்ன பண்ண சொல்றா? பெரிய இதுவா இருக்கணுங்கறியா? எதுவுமே முடியாது.. இதுல என்னன்னா அர்ப்பண பாவந்தான்.  இது வந்து நம்பளுடைய குறைகளை வந்து, சங்கீதம் வந், நல்லா நிறைவா இருக்கவங்களுக்குத்தான் அந்த நிறைவு கிடைக்கும். அப்போ அவனுடைய குறைகளையே அவன் நெனைச்சுண்டு, தர்ம சாஸ்த்திரம் என்ன சொல்லுது அதுக்குதான் முயற்சி பண்டிருக்கோம். . . . . சங்கீதத்தின் மூலம். வம்பு பேசலாமா பேசக்கூடாதா? சங்கீத வம்பு. வம்புல சில ஞானமான விஷயங்கள் கிடைக்குதே! அப்ப அதப் பேசிதானே ஆகணும். அடிபட்டாதான் கிடைக்கும்.  தியாகராஜசாமி பேசாத வம்பா? அவர் சொல்லாத விஷயமா? ஒரு கீர்த்தனையில ராமா எல்லாத்துக்குமே ராமனை கூப்பிட்டுடுவார். ஒரு கீர்த்தனை சொல்வார்: “கண்ணசைவைப் புரிந்து கொள்ளாத பெண் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா?” இன்னொரு எடத்துல சொல்றார். இதவிடப் பயங்கரம் – ஒரு வைணவர், வாத்தியாரே எனக்கு ஃபோன் பண்ணியிருக்கிறார். தியாகராஜாசாமி இப்படி பாடியிருப்பாரா? பாரு அர்த்தம் பார்த்து சொல்லுன்னு. ஃபோன் பண்ணார். என்னன்னா விபீஷணனுக்கு நாமம் போடலியான்னார். என்ன எங்க வைஷ்ணவ சம்பிரதாயத்தையே குறை சொல்ற மாதிரி இருக்கு? நாமம் போட்டுட்டான். பட்டை நாமம் போட்டதா சொன்னா அது வந்து வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு கஷ்டமா இருக்கும். இதே வார்த்தை சொல்லியிருக்கார் சார்! விபீஷணனுக்கு என்ன பண்ணே? ரங்கநாதருக்கு குடுத்த மாதிரி குடுத்த விக்ரகத்த அங்கே போயி ஸ்ரீரங்கத்தில போயி அவருக்கு மறுஜல இதெல்லாம் வர்றமாதிரி பண்ணி ஆத்துல குளிக்கணும்ங்கற மாதிரி ஏற்படுத்தி, பிள்ளையார் ஒரு பையனை அனுப்பிச்சி, பையனை வாங்கி ஒன்னை மூணுன்னு சொல்லி வைச்சுட்டார். ஏன்னா இந்திய எல்லையத் தாண்டக் கூடாது. அதான் ஸ்ரீலங்காவைப் பார்த்து தெற்கு நோக்கின பகவான். அப்ப விபீஷணனுக்கு நாமம் வேண்டினார். எவ்ளோ கலோக்கியலா. . . அவரு பேசாத வம்பா?  ஆனா அது சங்கீத அரட்டை. ஒரு சங்கீதக்காரன் லட்சணத்த மொதல்ல வரையறுக்கணும். அவன் நாதப் பிரம்மமா மட்டும் இருக்க மாட்டான். அவன் நாரதப் பிரம்மமாகவும்தான் இருப்பான். என்னோட ஆராய்ச்சில சங்கீதக்காரனுக்கு ஒரு வரையறை, என்ன பண்ணிக்கணுகிறதுல ஒரு தெளிவு. என்னை மாத்த முடியாது. நான் இப்படிதான் இருப்பேன் . . .சங்கீதக்காரனுக்கு ஒரு லட்சணம் உண்டு. அதுப்போலதான் இருப்பா. ஆனா சங்கீதக்காரனப் பார்த்துத் திட்டிண்டிருப்பார் தியாகரஜஸ்வாமி. ரொம்ப திட்டுவார். அவர் என்னமோ சங்கீதக்காரர் இல்லாத மாதிரி. அவர் என்னமோ பாகவதர்னு நெனைச்சிண்டிருக்கார் தன்னையே. நாங்கள்ளாம் அவரை பாகவதர்னு நெனைச்சிருந்தா நாங்க எப்படி? கிருஷ்ணரை திருடனெல்லாம் என்ன நினைப்பான்? அவனவன் கிருஷ்ணரை என்ன நினைப்பான்? கிருஷ்ணர் வந்து வெண்ணையை திருடி ….நாங்க தியாகராஜஸ்வாமியை சங்கீதக்காரரா வச்சிண்டிருக்கோம். அதான் உண்மையை போட்டு உடைச்சிட்டேன். இப்படியே போயிண்டிருக்கு. பெரியவா அனுக்கிரகம்.

ஆனந்: 5 நிமிஷமா ஒரு பாயிண்ட் உள்ளே ஓடிண்டிருக்கு. ஏதோ ஒரு கட்டுரைல கவிதை பத்தி எழுதும்போது நிறையபேர் கவிதையை தேடிப் போறாங்க சில பேரைத்தான் கவிதை தேடிவருதுன்னு. உங்க பேச்சை கேட்டுண்டிருக்கும்போது உள்ள வருது. இந்த இன்னர் டெவலப்மெண்டல ஒரு தியரி இருக்கு. அதுல ப்ரி-கன்வென்ஷனல், கன்வென்ஷனல், போஸ்ட் கன்வென்ஷனல்னு மூணு ஸ்டேஜ்னு சொல்லிட்டு….

ச.கோ: இன்னர் டெவலப்மெண்ட்லே..

ஆனந்:பிரிகன்வென்ஷனல் அப்பாஅம்மா சொல்லிக் கொடுக்கறது. அப்பா-அம்மா சொல்லிக்குடுக்கறா. அதை அப்படியே பாடறாங்க. எனக்கு எது சரின்னு தெரியாது. அதுலேர்ந்து வளர்ந்து ஏதோ ஒரு வயசுக்கப்புறம் கன்வென்ஷனல் ஸ்டேஜுக்கு வர்றோம். உலகத்துல இதெல்லாம் இருக்கு. அப்பா சொன்னதுக்கும் இதுக்கும் லேசா மாற்றம் இருக்கு. ஆனாலும் ஊரோடு ஒத்து வாழறதுன்னு வந்துண்டிருக்கு. அதைத்தாண்டி போஸ்ட் கன்வென்ஷனல்னு போகும்போதுதான் நீங்க சொல்ற மாதிரி புதுசா சில கிளைகள் பிரிஞ்சு போக ஆரம்பிக்கறது. நம்மளேதான் கூடப் போய் கண்டுபிடிச்சாகனும்னு உங்க சங்கீதத்துல மட்டுமல்ல உங்க சிந்தனையிலேயும் அந்த போஸ்ட் கன்வென்ஷனல் தெரியறது. இந்த மாதிரி ஒரு இயக்கம்தான் சங்கீதத்துல சில புதுசான திசைகளை நீங்க முன்னாடி போய்க் காமிச்சி பின்னாடி சில பேரு அந்தப் பக்கத்துல போறதுக்கு உதவியாயிருக்கும்.

ச.கோ:நெறைய பேருக்கு இந்தப் பேச்சே சின்ன மருந்து மாதிரி ஒரு  சின்ன வழிகாட்டியா உதவின்னு நெனப்பேன்.  குழப்பம் ஒரு ஸ்டேஜ்ல வரது. நீங்க சொல்ற மாதிரி கன்வென்ஷனல், பிரீகன்வென்ஷனல என்ன ஆயிடறதுன்னா இப்படிதான் இருக்கணுமோ அப்படிதான் இருக்கணுமோ அப்டிங்கற மாதிரியெல்லாம். ஒன்னுங் கெடையாது. சங்கீதம் உள்ளுக்குள்ளே இருக்கு. நம்ப பட்ட கஷ்டத்த இன்னொருத்தர் எளிமையா புரிஞ்சுக்கட்டுமே. புரிஞ்சு நன்னா இருக்கட்டுமே.

ஆனந்: ஃப்ளோ சொன்னீங்க. அது போஸ்ட் கன்வென்ஷன்லதான் அதை அனுமதிக்கவே முடியும். இல்லன்னா முடியாது.

ச.கோ: இல்லன்னா பயந்தானே இருக்கும். ஆரம்பத்துல அப்பா அம்மா சொன்னததானே ஃபாலோ பண்றோம். ஏன் கேக்கறேள். அது பிஞ்சில பழுக்காம இருக்கறதுக்காகத்தான். அவாளுக்குத் தெரியாதா?  சிருங்காரத்துல சிருங்கார பக்திதான் ஒசத்தின்னு சொன்னவங்க, பக்திலயே சிருங்கார பக்தி, நாயகன் நாயகி பாவத்துலதான் முழுமையடைய முடியும்ன்ட்டான். சொன்னனே! அந்தப் பரிணாம வளர்ச்சிதான் முக்கியம். என்னன்னவோ எல்லாம் வரும். ஜாவளிப் பதங்கள்லாம் எடுத்திட்டீங்கன்னா ஒரு விஷயம் பாக்கி இல்லாம வரும். உண்மையில, சௌந்தர்ய லஹரின்னு பெரிய ஸ்லோகம்லாம் எடுத்திட்டீங்கன்னா, பெரிய பெரியவா சொல்லுவார், எந்த சதஸ்னு பாத்து சொல்லணும். எதைச் சொல்லணும் ஏன்னா ஒலகத்துக்கு சொல்லிண்டிருக்கோம். அதுக்கு வந்து ஒரு மாதிரி இருக்கணும். கிருஷ்ணப் பிரேமி அண்ணா வந்து ஒரு எடத்துல சொன்னார். ரொம்பப் புடிச்சிருந்தது. என்னன்னா ராமாயணம் மகாபாரதம் இருக்கு. ராமாயணம் தர்மம். ராமர் வந்து தர்மம். இவன் ரஸம். கிருஷ்ணன் வந்து ரஸம். தர்மமே புரியாதவனுக்கு ரஸம் எங்கே புரியப் போவுது. ராமனைப் புரிஞ்சாதான் நீ கிருஷ்ணனப் புரிஞ்சுக்க முடியும். அப்படிங்கிற மாதிரி. அவங்க எந்த லெவல்லேர்ந்து அதைப் பேசறாங்கறது நாம அந்த லெவல்லே போய் ரசிக்கறோமா. எல்லா சப்ஜக்டுக்குமே அது பொருந்தும் கொச்சையா பார்த்தோம்னா போச்சு

சங்கீதம் ரொம்ப சுவாரஸ்யமான சப்ஜக்ட். அதுல ஒர்க் பண்றதுக்கும் அவ்வளவு இருக்கு. சொல்றது-பகிர்ந்தகறதுக்கும் அவ்வளவு இருக்கு.

சமீபத்தில ஒரு ENT டாக்டரைப் பார்த்தேன். அவரு பெரிய ரிசர்ச் பண்ணி எங்கிட்ட ஒண்ணு சொன்னார். மேற்கொண்டு அவரு நாங்கள்லாம் அதுல வெய்ட் பண்ணாத அளவு அவரை பகவான் அழச்சிண்டு போய்ட்டார். அவர் என்ன சொன்னார்னா human voice is made more for singing than speaking. அதான் ஒரு ரிசர்ச் பேப்பர் சப்மிட் பண்ணிட்டு வந்தார். வந்து அடுத்த வாரம் போய்ட்டார்.

தத்துவம் புரியாம, பாரதி சொன்ன மாதிரி, ”ஆயிரம் கவி கற்றாலும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”னு படிச்சேன் நான். அந்த பொயட்ஸ் ஹார்ட் இருக்கே அது வேணும்.

(பாடுகிறார்) எந்துகோ. . .பேதல

”எந்துகோ பெத்தல புத்தி”ங்கறார். இந்தக் கீர்த்தனையோடு சாராம்சம் என்னன்னா வேதசாஸ்திரம்லா கத்துண்டேன். உபநிஷத் எல்லாந் தெரிஞ்சுனுட்டேன். அதனுடைய சாரம். நாலு வித்யா(மர்மம்) கத்துணுட்டேன். இருந்தாலும் எனக்கு மகான்களோடு புத்திய ஏன் கொடுக்கலங்கறார். இதுதான் மெஸேஜ் ஃபார் மியூஷியன்ஸ். ஆக, இதையெல்லாம் விட அது பெரிசுன்னு தெரியுது. உயர்ந்த உள்ளம்-நோபிள் ஹார்ட். அது வந்து, சப்போஸ் நம்ப மனக்குரங்கு இருக்கே, அது ரொம்ப ஆடிண்டே இருக்கும்னு வச்சுகுங்களே அதை அடக்கறதுக்கு ஒரே வழி என்னன்னா சரி நீ ஆடு அப்படின்னு விடணும். நீ இப்படித்தான் அப்படின்னு முதல்ல அங்கீகாரம் பண்ணனும். அப்புறம் அது அடங்கி நெருங்கி கொஞ்சம் உயர்ந்த சிந்தனையெல்லாம் அதுல வரும். நான் எதுக்கு சொல்றேன்னா நான் வளர்ந்த சூழ்நிலையை சொல்ல முடியும். சில பேர் பெரிய சதாசிவ பிரம்மேந்திரர் மாதிரி இருந்தவான்னக்கா மனசு அப்படியே ஒஸ்தியாதான் இருக்கும். நான் ரொம்ப சாமானியனாவேதான் இருந்திருக்கேன்

ஆனந்: ”ஸ்திரதா நஹி நஹி ரேன்னு”தான்னு சொல்றார் அவர்.

ச.கோ:சின்னசின்ன ஆசையின்னு பாடினான் பாருங்கோ, அது மாதிரித்தான் இதெல்லாம். சந்தோஷப்படற ஆத்மாதான். ஆனா இந்த சங்கீதம் ஃபோர்மோஸ்ட் டிசையர். தெரிஞ்சோ தெரியாமலோ அதுல போய்ட்டோம்னாக்க – இப்ப பாருங்கோ ஃலைப் ஸ்டைல்ல நம்ம இந்தியன் கன்வென்ஷனல் மெத்தட்ல ராமராமன்னு சொல்லிண்டு யாருக்கும் எடைஞ்சல் இல்லாம சாத்வீகமாக சேவை பண்ணின்டு ஒரு மார்க்கம் இருக்கு. அது  வந்து எனக்கு ரொம்ப பிடிச்ச மார்க்கம். ஏன்னா எளிமை. எளிமையிருக்கு. அப்புறம் வந்து, ரொம்ப சுலபம். ”ராமராமங்றது ஊமையில்லாதவங்க சொல்லலாம். ஊமையில்லாம இருந்தாப் போதும். ஓரே தகுதி. ஆக, அந்த பாகவத தர்மத்ததான் பிரதானமா பிரச்சாரம் பண்ணின்டிருக்கிறார் தியாகராஜசாமி. ஏன் அவரை சத்குருவா வச்சிண்டிருந்தோம்னா, அவரு எவ்வளவு பெரிய சங்கீத மேதையாயிருந்தாலும் எளிமையை, ஃபோர்மோஸ்ட் கேரக்டராக டெபிக்ட் பண்ணியிருக்கிறார். இல்லன்னா என்ன ஆயிடறதுன்னா வித்தையின் மூலமா எழுத்து மூலமா ஒரு தெளிவும் நிம்மதியும் கிடைக்கலன்னா அந்த கிரியேஷன் எதுக்குங்கிறது? சிலதெல்லாம் படிச்சு முடிச்சவுடனே ஆஃப்டர் எபக்ட்ஸ்ன்னு சொல்றது. அது எப்டி இருக்கு? தெளிவு வேண்டாமா? நாமலே பேசிண்டிருக்கோம், போன இடத்தில மனசு கனமா இருக்குன்னா எப்படி இருக்கும்? நிம்மதியா வேற எதாவது பண்ணியிருக்கலாம்னு தோணும்.

பழனிவேள்: தமிழிசையில தமிழிசை சார்ந்த நிறைய புத்தகங்கள் இருக்கு. கருணாம்ருத சாகரம், யாழ் நூல், சிலப்பதிகார ஆய்வு-இந்தமாதிரி புத்தகங்களையெல்லாம் நீங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறீர்களா?

ச.கோ: குடந்தை சுந்தரேசனார்னு கேள்வி-பதில் மாணவர்களுக்குப் பதில் சொல்ற மாதிரி அந்த புத்தகத்த முழுக்க படிச்சி அதை ஆடியோ புக் மாதிரி பண்ணி அதெல்லாம் கொஞ்சம் பண்ணுவேன். இந்த சிலம்பு-வெல்லாம் நான் ரொம்ப எடுத்துக்கலை-ஏன்னா என்னோடு சப்ஜக்ட் அதில்லைங்கற மாதிரி. எல்லாத்துக்கும் ஒரு பேர் சொல்றா அவ்வளவுதான். ராகம்னா அந்த காலத்தில ஆலத்தின்னு இருந்திருக்கு. ஒரு அஞ்சாரு பேரு இருந்திருக்கு. ஒவ்வொரு காலகட்டத்திலயும் ஒரு பேரு. ரஸம்ங்கறது ஒன்னுதானே. சங்கராபரணம்ங்கற ராகத்த

(பாடுகிறார். . .)

ஒற்றுமை சேர்வது மெய்யிணையே. . .ன்னு ஞானசம்பந்தர் பாடினார். இவரு தெலுங்கில பாடினார். மொத்தத்துல அந்த ராகத்தோட குரல். அந்தத் தேன் நமக்கு கெடைச்சிட்டா போதும். ஆனா படிக்கறவங்கள்லாம் இருக்கிறாங்க. நமக்கு அதுல ரொம்ப ஆழமா போகல. எல்லாம் ஒரு தரம் பார்த்துக்கிறேன். தொல்காப்பியத்துல இருந்து எடுத்து ஆபிரகாம் பண்டிதர், தலைகாணி வைச்சு படுத்துக்கற நூல் அது படிச்சிட்டேயிருக்கலாம். தூக்கம் வந்தால் படுத்துக்கலாம். ஆராய்ச்சின்னா எழுதினவாளைப் பார்த்துப் பிரமிக்க ஆரம்பிச்சுடுவோம். விபுலானந்த அடிகளோடு யாழ்நூல் அவங்க சொன்ன விஷயம் எல்லாம் சேர்ந்து ரகுநாத வீணைன்னு-ரகுநாத நாயக்னு நண்பர் ஒருத்தர்-அவர் என்ன பண்ணிட்டார், வீணைய ஃபர்பெக்ட் பண்ணி, இப்ப இருக்கிற வீணைக்கு ரகுநாத வீணைன்னு பேர். முடிஞ்சு போச்சு அதுக்கு முன்னாடி வீணை எப்படி இருந்தா என்ன? ஃபர்பெக்டட் வீணை கையில இருக்கு. இந்த யாழ் அந்தகாலத்தில இருந்திருக்கு. இந்த யாழ் ஹார்ப்தானே? இப்ப ஸ்வரமண்டல் வைச்சுக் கிட்டிருக்காங்க. அது வந்து… பாடுவதற்கு உறுதுணையாத்தான் இருந்திருக்கே தவிர அதில வெவ்வேறு ராகங்களை வாசிச்சது கிடையாது. யாழ்ப்பாணர் நம்ம திருநீலகண்ட யாழ்ப்பாணர்தான் போட்டிருக்கார். பண்றார்னா. இந்த யாழோடு இனிமையினாலதான் பாட்டே பிரமாதமா இருக்குன்னு ஒருத்தர் கிளப்பி விடறார். அப்போ யாழ்ப்பாணர் சொல்றார் நீங்க ஒரு ராகத்தைப் படைச்சி இதுல வராத ஒரு ராகமா பண்ணிக் காட்டணும் அப்பதான் ஜனங்களுக்குப் புரியும் வாய்ப்பாட்டோடு மகிமைன்னு. இறைவன் கொடுத்த கருவி. அவர் மேகராகக் குறிஞ்சி பாடறார். யாழ்முறிப்பண்-னுன்னே அதற்குப் பேர். அவரால வாசிக்க முடியல. இப்டி ஒரு கதை. அதாவது எதுக்கு சொல்ல வர்ரேன்னா இந்த மாதிரியெல்லாம் நிகழ்வுகள்லாம் இருக்கு. அப்புறம் இந்த இசைக்கருவிகளெல்லாம் செய்யற முறை. அப்புறம் அரங்கு எப்படி நிர்மாணிக்கணும் இதெல்லாம் சிலப்பதிகாரத்தில இருக்கு. யாரு கேக்கறா இப்போ? அக்கூஸ்டிக்ஸ் யாரு கேக்கறா? அமெரிக்கன்ஸ், இந்த ஃபாரினர்ஸ் நல்ல ஃபாலோ பன்றாங்க. இப்பதான் அக்காடமி சரியா போயிருக்கு. இதுவரைக்கும் எதிரொலி. மியூசிக் அக்கா டெமியில எதிரொலி அடிக்கும், அவ்ளோ பெரிய ஹால்ல. இந்த வருஷம் ரொம்ப நல்லாயிருந்தது. அப்புறம் நம்ப ஊர்ல இப்பதான் வந்திண்டிருக்கு. மைக்கு ஃபீட்பேக்ல ஒன்னுமே தெரியாது. இதே யூரோப்லே போனீங்கனாக்க ஒரு இருநூறுபேர்தான் வரப்போறோம், மைக் கிடையாதுன்னு சொல்லிருவான். அந்த ஹால் தேர்ந்தெடுக்கிறதே எப்படி இருக்கும்னா மரத்திலேயே பண்ணியிருப்பான். அந்தமாதிரி ஆடிட்டோரியத்துக்குத்தான் அழைச்சிட்டு போவான். அவங்களுக்கு மியூசிக் இந்த நேச்சுரல் சரவுண்டிங்ல இந்த சப்தத்தோட தன்மை மாறாம கேக்கனுங்கற ஆசை இருக்கு. இந்த மாதிரில்லாம் ஒரு அக்கறை வேணுமே. பொதுவா சில பேரு ரொம்ப ஆசையா இசைவிழா நடத்துவாங்க. கல்யாண மண்டபத்தில வைச்சுருவாங்க. அதுக்கு அவ்வளவுதான். எல்லாம் ஆசையா இருக்கும். கச்சேரி மட்டும் பாடிட்டு வந்தோம்னா இரண்டு நாளைக்கு எழுந்திருக்க முடியாது. ஏன்னா அந்த ”எக்கோ” என்ன பாடறோம்னே தெரியாது. அதுக்கு ஒருத்தர் இருக்கார் இங்கே. மைக் கண்ணன்னு பேர். அவரை அழைச்சிண்டு போவோம். எப்படிப்பட்ட எக்கோ உள்ள அரங்கமா இருந்தாலும் அந்த ஸ்பீக்கர் வைக்கற அழகுல தேவலோகமா மாத்திருவார். என்னதான் கற்பனை இருந்தாலும் மைக்காரர் கையிலதான் இருக்கு. அவரைப் போய் நீங்க இண்ட்டர்வியூ பண்ணுங்க. இப்போதான் புரியறது எங்களுக்கே என்ன வேணும்னுட்டு. அவ்வளவு திண்டாட்டம்.

அது சூட்சுமம். ஒரு மின்னல் கொடி மாதிரி இருக்கு. பாடகர் எந்த அளவுக்கு அதைக் கண்ட்ரோல் பண்ணிக் கொண்டு வரேளோ அந்த அளவுக்குதான் எக்ஸ்பிரஷன். அதுக்கு மேலே என்ன ஐடியாஸ் வச்சிருந்தாலும் வெளிலயே வரப்போறதில்ல. அதுக்கு ஒரு சிஸ்டம் இருக்கு. அதுக்கு ஒரு இண்ட்டர்னல் கியூரிங் மாதிரி இருக்கு. சின்ன ஒரு, உனக்கு மட்டும் கேட்கக் கூடிய சின்ன டோன்தான் உள்ளேருந்து வரதுன்னு வச்சுக்குங்கோ அப்ப எப்படி சின்ன அக்னி கெடைச்சாலும்  பெரிசு பண்ண முடியும் ஊதி ஊதி பெரிசு பண்ண முடியும். அது மாதிரி ஒரு சிஸ்டம் இருக்கு. இஃப் யூ கன்சிடர் இட் அஸ் என் யோகா தென் இட் இட்செல்ப் இஸ் மெடிசின். அந்த பேஸிக் நாதத்தை வைச்சு பில்டப் பண்ணி அதோடு தத்துவங்கள் என்ன? இப்போ இப்போ ஷட்ஜத்திலேர்ந்து ரிஷபத்துக்குப் போறதுக்கு- அசைக்கறதுக்கு ரூல்ஸ் இருக்கு. அந்த மாதிரி பண்ணினீங்கன்னா என்ன ஆகும்னா எல்லாம் அனுகூலமா உங்களுக்கு இன்டர்ரேக்ட் பண்ணும். சரியானபடிக்கு ஸ்வாசிக்க முடியாதவங்களுக்கு ஒரு சில எக்ஸசைஸ் குடுக்கறாங்க. அதை கொஞ்சங்கொஞ்சமாக் கொண்டு போய், பெரிய லெவல்லே அரை மணிநேரங்கூட இருக்கு. இதே மாதிரிதான் செய்ய முடியும்ங்கற ஒரு தத்துவம் இருக்கு. அத நாம் கத்து வைச்சிருந்தாத்தான் கச்சேரி பண்றதுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஏற்கனவே சிலபேருக்கு சாரீரம் பிரமாதமா எட்டுக்கண் விட்டெறியும. அந்த மாதிரி சாரீரம் பிரமாதமா இருக்கறவங்க ஆழத்துக்கு போகமாட்டங்கன்னு சொல்வாங்க. அடுத்த ஸ்வரம் பிடிக்க முடியுமாங்கற போதுதான் முறையைப் பார்ப்பாங்க. இப்போ நாம சொல்லலாம். இது நாத யோகம். ஏழு ஸ்வரங்களை எப்படி பிடிக்கணும்னு எல்லாம் சாஸ்திரங்கள் இருக்கு. அது, நீ  எப்ப தெரிஞ்சக்கிறே? எப்ப யோகா கத்துக்கறான்னா, ஒடம்பு சரியில்லாத போகும்போது கத்துக்கிறான். ஒழுங்கா எவனாவது கத்துக்கறானா? அது கிடையாது. அப்ப கொஞ்சம், ஒஹோ இன்னைக்கு ஜாக்ரதையாப் புடிக்கணும்ங்கிறபோது அந்த சிஸ்டம் ஞாபகம் வருது. அதுல உள்ள போகும்போது என்ன ஆகுதுன்னா இந்த தன்னுணர்வுன்னு சொன்னீங்க இல்லையா? இந்த நாடியானது கொஞ்சங் கொஞ்சமா இம்ப்ரூவ் ஆகி போகப் போகப் போக யூ வில் ஃபீல் லைட். – யூவில் ஃபீல் லைக் எ யோகி. அதுக்கப்புறம் கச்சேரி முடிச்சி வந்த பிறகு முன்னாடி உக்கார்ந்திருக்கவங்க உணர்வைப் பாத்தீங்கன்னா ரொம்ப ஆனந்தமா இருக்கும். நீங்களா கெடுத்துக்கிட்டீங்களாலொழிய. அதுக்கப்புறம் யோக பிரின்சிபில்லாம் இருக்கு எப்படி சாப்பிடணும், எப்போ சாப்பிடணும்னு, நிறைய பிரின்சிபில்லாம் இருக்கு. ரசஞ்சாதம் சாப்பிட்டா கொஞ்சம்  சூடு கிடைக்கும். இசை பெரிசு. அதைக் காப்பத்தறது ரொம்ப பெரிய கஷ்டம். அதுக்கு ஆயிரத்தெட்டு ரூல்ஸ் இருக்கு. அதனால இதல்லாம் உத்தேசிச்சு நாம ஒத்துக்கணும் இல்லையா? ஒரு கச்சேரியை ஒத்துக்கும் போது. அதே மாதிரி பக்கவாத்தியங்கள் இருக்கு. நாம் என்னதான் பாடினாலும் அவுங்க வேற மாதிரி காட்டினாங்கள்னா நாம கிளாஸ் எடுக்க முடியாது. ஃப்ளுட் டி.ஆர்.மகாலிங்கம்  இருக்காரே! மாலி- கிளாஸே எடுத்துருவாரு அங்கேயே. அது இல்லே நான் பாடினது, அது இல்லே. இதுக்கப்பறம்தான் பிறகு போகலாம். ஒரு வயலினையே போட்டு ஒடச்சுட்டார் அவரு. இது வேண்டாம் உனக்கு இந்த வாத்தியம்னு. அத நாம பண்ண முடியாது.

பாவூர் வெங்கட்ராமையர்  ஒரு தடவ மாலிய வில்லால அடிச்சுட்டு போயிட்டார். அவரு போய்டுவார் சார். அவர் குருவாச்சே. குரு என்ன வேணுன்னாலும் செய்யலாம். ராஜரத்னம்பிள்ளை ஒரு வயலினிஸ்ட் கிட்டதான் கத்துக்கிட்டார். ராஜரத்னம் பிள்ளைக்கு சொல்லிக் குடுத்திட்டிருக்கும் போது ஒரு எடத்துல மொட்டையா(ஸ்வரம்) புடிச்சிட்டாராம் வயலின் வில்லாலே மூக்கில குத்திட்டாரம். அவரு ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு. ஏண்டா, ரயில்வே கைகாட்டி மரம் மாதிரி மொட்டையா வளைக்கிறே? நான் எப்படி அந்த ”நி”ய சொல்லிக் குடுத்தேன்? கைத்தடிய முழுங்கிட்டு நடக்கறவன்மாதிரி பாடறே? அப்டின்னாராம். அதுலேயிருந்து நான் கனவுல கூட மொட்டை ஸ்வரம் பிடிக்கறதில்லை. அதாவது ராஜரத்தினம் பிள்ளைய ஒஸ்த்தியா சொல்றோம். அவர் வீணை தனம்மாள்கிட்ட எப்படி மரியாதை வச்சிருந்தார். அதே மாதிரி வீணை தனம்மாள் பரம்பரையில பிருந்தா முக்தா-ன்னு. அவங்களுக்கு அவ்வளவு ஞானம். ராஜரத்தினம் பிள்ளை எக்மோர்-ல வாசிக்கறாங்களாம். பிருந்தா முக்தா போயிருக்கிருக்கிறாங்களாம்.”அம்மா நீங்களா?”அப்படின்னாராம். “நான் என்ன பண்றது? நீங்க வந்துட்டீங்களே நான் என்ன பண்றது?”ன்னாராம். “என்ன பண்ணனுமோ அதப் பண்ணிர வேண்டியதுதான்” அப்படி ஒரு பதில். அப்படி ஒரு ஞானம். வீணை தனம்மாள் சங்கீதத்துல ஒரு உச்ச எல்லை. எந்த குருகிட்ட கத்துகிட்டாலும் அந்த பாணிக்கு போயிடுவாங்க. ஒரு தீஸிஸ். அப்சொல்யூட் ஸ்டைல்-னு ஒண்ணு இருக்கு. அப்சொல்யூட் ஸ்டைல் இன் மியூஸிக். அதாவது நீ மூணு ஸ்வரத்துக்குள்ள மூணு மணிநேரம் பாடு. அப்போ எல்லா காம்பினேஷனும் வந்திருமில்லையோ? அப்ப அதுக்கு ஒரு ரூல் இருக்கில்லையா? . . .

அவரு(தியாகராஜர்) ரொம்ப பொல்லாதவர்னு எங்க சங்கரய்யர் சொல்லுவார். அவர் சொல்றத நீ ஒடச்சி பாத்தீன்னா முழுக்க தத்துவ யோகா இருக்கும். எல்லாம் இருக்கும் சும்மா பக்திங்கற போர்வை ..

அதே மாதிரி இந்த பாட்டுப் போடறவனுக்கு உள்ள தகுதி ஒன்னு சொல்லியிருக்கார். அதாவது நல்ல மிருதங்கத்த நாதத்தோட சேத்துப் பாடி ராமா உன்னை சொக்கச் செய்யக்கூடிய தீரன் யாருன்னு கேக்கறார். நீயே சொக்கிப் போயிடணும் அந்த மாதிரி யாராவது பாட முடியுமா? பதில் சொல்லியிருக்கிறார் கடைசில, இந்த தியாகராஜனால அது முடியாதுன்னு. அப்பிடின்னா அது என்னத்தக் குறிக்கறதுன்னா அது அவ்வளவு ஈஸி இல்ல. நல்ல மிருதங்கம் ”சொகசுகா மிருதங்கம்” அந்த சொகசுங்கற வார்த்தை தெலுங்கு. தமிழ்ல எந்த வார்த்தையும் இல்லை. தெலுங்கில மட்டும்தான் இருக்கு நல்ல மிருதங்கத்த வச்சிட்டுப் பாடினா ராமர் குளுந்திருவாரான்னா கிடையாது அனுபல்லவியில அடுத்து வருது.

”நிகம சிரோர்தத முகல்கிந

நிஜவாக்குலதோ ஸ்வரசுத்தமுதோ”

பாட்டு எப்பிடி இருக்கணும்னா தேகத்தின் முடிவான உபநிஷத் கருத்துக்கள் அடங்கின நிஜவாக்கா இருக்கணும். இந்த நிஜவாக்கு எப்ப வரும்? இந்த உபநிஷத் கருத்துக்களை யார் ஃபாலோ பண்றானோ, பேராசையா இருக்கானோ அவன் போட்ட வாக்கிலிருந்து உயிர்த்த அந்த வார்த்தைகள்

”நிவாக்குலதோ ஸ்வரசுத்தமுதோ” மறுபடியும் ஸ்வர சுத்தம். அதுக்கப்புறம் டெஃபனிஷன் எதுகை மோனை தொட்ட இடமெல்லாம் சௌக்கியத்தை குடுக்கறதா

”யதிவிச்ரம ஸத்பக்தி

விரதித் திராட்ஷாரஸ நவரஸ”

அதுவும் விச்ராந்தியோடு ஒரு தன்மைதான் அதுக்காகப் பாடாம இருப்போமா அந்த லைன்லதான் எடுத்து பாடிண்டிருப்போம். ரசிகனுக்கு எல்லாமே ஒண்ணு. தியாகராஜர் இப்படி சொல்றார், தீட்ஷிதர் இப்படி சொல்றார் அப்படி அவன் போயிட்டே இருப்பான் ஒண்ணுமே அவனைச் சொல்ல முடியாது. எதுக்காகத் தோடி ஆரம்பிச்சோம்? எதுக்காகத் தோடி பாடறோம்? இப்படி எல்லாமே பாத்தா ஆனந்தம்

(தோடி ஆலாபனை பாடுகிறார் )

இந்த சப்தம் மட்டும் என்னன்னா இட் ஈஸ் கண்டேஜியஸ். சைலன்ஸ் பத்தி எனக்குத் தெரியாது இஃப் யூ கிவ் இட் லைக் சபரி-கடிச்சி குடுங்கோ சபரி பழத்தை குடுத்தா ராமர் வாங்கிண்டே ஆவார். ஏன்னா பழம்னு உங்களுக்குக் குடுக்கறேன், அது பழமாத் தெரியணும். சாப்பிட்டுப் பாக்கணும் உள்ள செங்காயா இருக்கு, அழுகியிருக்குன்னு நீங்க சொல்லக் கூடாது. நானே கன்ஃபர்ம் பண்ணிக் கொடுக்கணும் உங்களுக்கு. இது நல்ல பழம் உடனே சாப்பிடு இப்பவே சாப்பிடு அப்பிடின்னாதான் அப்படி இருந்தாதான் அது போய் சேரும். இல்லையா. உள்ளுக்குள்ள நடக்கணும். அதுதான் ரகசியம்.

பி.ரா: தமிழிசை பற்றி உங்களோடு ஸ்ட்ராங்கான ஒப்பினியன்ஸ்?

ச.கோ:தமிழிசைன்னா நான் எவ்வளவோ நாள் தேவாரம்லாம் பாடி சில நாள் ”பண்ணே உனக்கான பூஜை”ன்னு எடுத்துக்கிட்டேன். சில நாளைக்கு பூஜையெல்லாம் பண்ண முடியறதில்லை பாதிநாள் முடியல. அது தாயுமானவர் லெவல் வேற. அவர் எல்லா பூஜையும் ஒழுங்கா பண்ணிட்டு ஒரு நாள் பூஜைக்காகப் புஷ்பம் பறிக்கப்போறார்:

”பார்க்கின்ற மலரோடு நீயிருத்தி”

உன்னைப் பறிக்கலாம்னு பார்த்த அங்கேயும் நீதான் இருக்கறேங்கற லெவல்ல அவர் எழுதியிருக்கிறார் நான் அந்த லைனுக்குப் போறதில்லை. நான் பண்ணேன் உனக்கான பூஜையை. இன்னைக்கு நான் பண்ணலை. இந்த மாதிரி catchy lines எல்லாம் இருக்கு.

”பால் நினைந்தூட்டும் தாய்”-நினைந்து நினைந்து-குழந்தை விளையாடிண்டு இருந்தாக் கூட போயி குழந்தைக்கு டைம் ஆச்சே பசிக்குமேன்னு நினைந்தூட்டும் தாய், தாயினுள் சாலப் பரிந்து-அந்த வரியிலேயே சகலமும் இருக்கும்போது ஒரு வரி கெடச்சுடுத்துன்னா நமக்கு அதை ஒட்டின சங்கீதமும் சேர்ந்து வரும். அப்போதான் சங்கீதமே நமக்குப் புரியும் இல்லையா? ”பட்டிக்கடாவில் வரும் அந்தகா” இது எடுத்து நான் பாடினேன்னா எப்படி சங்கீதம் வரும்? அதுவும் கந்தர் அலங்காரத்திலதான் வருது. உதாரணத்துக்கு சொல்றேன். உங்களுக்கு என்ன பாவம் வேணுமோ ”உன்னைப் வெட்டிப் புறங்கண்டலாது விடேன்” அப்படியெல்லாம் வருது. அதுக்குத் தகுந்த ராகத்திலெல்லாம் நான் பாடிட்டு பண்ணிக்கலாம். ஆனா கோர் சப்ஜக்ட் என்ன? மாணிக்கவாசகர் இந்த மாதிரி உருகின-”உன்னை எனக்குத் தந்தது என்தன்னை”-அப்பதான் அந்த செறிவு புரியும். அந்த அருகிரிநாதர் வரிகளை எடுத்துண்டு உள்ள ஈர்த்து எவ்வளவோ சொல்லியிருக்கார் அந்த மாதிரி வரிகளை எடுத்துண்டு, அது நம்மை ஈர்த்து ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி ஊனை உருக்கணும். சாதகமா ..எனக்குள்ள அது ஓடிட்டு இருந்தாலும் கூட, சத்சங்கத்திலதான் இது நல்லா கிடைக்கும். நாலு பேர் சேர்ந்தா எப்படி இருக்கும்? இன்னும் பாவங்கள் பெருகும் அந்த பாவ பலம் இருக்கில்லையா அந்த வாசனா பலமும் உள்ள போய் சேரணும். அதுதான் வந்து என்னை கடுகளவாவது உயர்த்தறது-இல்லேன்னா வந்து அப்படி இருந்திண்டிருக்கேன், இந்த சூழ்நிலைகளோடு அதிருப்திகள் இருக்கும் பாருங்கோ.. வெத்தலைலிருந்து புகையிலை போட்டுக்கறது-என்ன அம்போன்னு விட்டுட்டு ஊருக்குப் போய்ட்டான். இன்னைக்குத்தான் வந்திருக்கான்-இதெல்லாம் இப்படி இப்படி உள்ளுக்குள்ள ஓடிட்டிருக்கும். எவ்வளவோ கவலைகள்-மனுஷனுக்கு கவலைப்படறதுக்குன்னே ஒரு ஜன்மம். அதை ஜெயிக்கறதுதான் ரொம்பக் கஷ்டம். சங்கீதம் உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி இருக்கு. ரொம்ப கிளியர். அந்த அனுபவத்த-பெரியவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க-. . . ”உனக்கு அனந்தம் ஆத்மார்த்தம் வேணும்னு ஆசைப்பட்டா அதுக்குள்ள அவகாசத்தை நீ ஏற்படுத்திக்க மாட்டேங்கிறயே!  பல விஷயங்களுல நீ போய் மாட்டிக்கிட்டு இது மட்டும் வேணும் வேணும்னா ஆசைப்பட்டா எப்படி?”ங்கறாங்க. அது செவுட்டுல அடிச்ச மாதிரி இருக்கு எனக்கு-நெறைய அவகாசத்த ஏற்படுத்திக்கணும். அந்த அவகாசங்கறதை வெற்று அரட்டைன்னு நினைக்கக் கூடாது. ஏன்னா,  காந்தர்வ வேதத்துலஇசையப் பத்தி சொல்றாங்க-சங்கீதக்காரர்லாம் குஷியா இருக்கணும், குஷியா இருக்கணும்னு. அவங்க நினைச்சிண்டிருக்கிற குஷி இல்ல.  சாந்தத்தை தழுவின ஒரு ஆனந்தம். அது என்னைக்குமே நம்மை விட்டுப் போகாத ஒரு ஆனந்தம். இந்த குஷின்னா ”நாங்கள்ளாம் குஷியா இருந்தாத்தா எங்களுக்குப் பாட வரும்” தாங்களே கவிஞர்கள்னு சொல்லிண்டு, அந்த காலத்துல பாகவதர்னு சொல்லுவா இப்ப ஆர்ட்டிஸ்டுன்னு சொல்றான். ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம். வெறும் ஆர்ட்டிஸ்ட் நீ. உனக்கும் பகவானுக்கும் சம்பந்தமே இல்லை. இறைநிலைக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாத நிலையை அடைஞ்சிட்டியேன்னு ஒருத்தர் சொல்லியிருக்கார். இதையெல்லாம் அப்படியே யோசிச்சிண்டு இருப்பேன். இதெல்லாம் ஓடணும் உள்ளுக்குள்ள. ஓடினதான் அவங்க என்ன சொல்றாங்க ”மெய்ப்பொருள் காண்பதறிவு”. இந்த லைன்ல என்ன திருப்பி விட்டதே தெய்வத்தின் குரல். ”ஸ”வும் ”ப”வும் தெய்வம். தனியா பூஜையே நமக்கு வேண்டாம் வேதத்துல பண்டிதர் அவர் அப்பா. வேதம் ஒரு சப்ஜக்ட். நமக்கு எல்லாம் சுலபமானதுதான் வேண்டியிருக்கு கலியுகத்துல. இப்ப எனக்கு சொல்லு டக்குன்னு ராமா, அதுக்கு மேல வேண்டாம் கிருஷ்ணான்னா கூட கஷ்டம். ராமா ராமான்னு சொல்லிண்டிருங்க. அதே மாதிரி சங்கீதத்துல பூஜை முறை இருக்கு.

(ஸ்வரம் போடுகிறார். . .)

அதுமாதிரி ரெவ்யூ எழுதறவங்களையும் தெரியும். விதிவசத்துனால வந்தானா- என்ன சொல்றீங்க? எல்லா சப்ஜக்ட்லயும் உண்டுல்ல. ராம ராம. எல்லாத்துக்கும் எடம் குடுக்குது பாருங்க இந்தக் கலை. நேத்திக்கு சாயந்தரம் இதே நேரத்தில கணபதி ஸ்தபதி வீட்டுல இருந்தேன்.

சிற்பங்கள்ல இருக்கற விஷயங்கள் சொன்னா சிலிர்த்துப் போகுது. என்ன உயரங்கள் ரீச் பண்ணிருக்காங்க.

நடராஜர் சிலையில இடது காலைத் தூக்கும் போது உயரம் கூடுமா குறையுமான்னார். அந்தக் கேள்வியிலேயே அடிபட்டுப் போயிடும். அப்புறம் ஒரு படம் போட்டுக் காட்டினார். எவ்வளவு குறையுங்கிறதுக்கு ஒரு ஃபார்முலா குடுத்திருக்காங்களாம். இவ்வளவு ஆழமா, இவ்வளவு புரொசீஜர் எல்லாம் எப்படிக் கண்டுபிடிச்சாங்க? இந்தக் காலை இப்படி தூக்கறத ள்னால சில அங்குலங்கள் குறையும்.  சான்ஸ் கெடைச்சா இந்த சப்ஜக்ட்டும் படிச்சிக்கலாம்.

ரா.கோ: எல்லாத்தையும் பாக்கும் போது நாம இந்தப் பிறப்போடு போதும்னு சொல்லக் கூடாது. இன்னும் நிறைய பிறப்புகள் வேணும்னு சொல்லியிருந்தோம்.

பி.ரா: கருணாம்ருத சாகரத்த எடுத்துக்கிட்ட பிறகுதான் அந்த ரிமார்க்கே வந்தது. ஆனந்த்  என்ன சொன்னார்னா சைமல்ட்டேனியஸ் பிறவிகள் வேணும்னு சொன்னார்.

ஆனந்: ஒரு முப்பது ஆனந்த் இருந்தா போதும். கவிதைக்கொரு ஆனந்த், தத்துவம் படிக்கறதுக்கு ஒரு ஆனந்த், சயன்ஸ் படிக்கறதுக்கு ஒரு ஆனந்த்

பி.ரா:அதையெல்லாம் வேடிக்கை பாக்கறதுக்கு ஒரு ஆனந்த்.

ச.கோ:கூர்த்த மதியால் கொண்டுணர்வார் தம் கருத்தில் நோக்கே நோக்கரிய நோக்கு நுணுக்கறிய நுண்ணர்வே. அதனால்தான் நீங்க சொன்னீங்க பாருங்க ஆரம்பத்தில யாரோ ஒரு அறிஞர் சொன்னார் – இசையை நோக்கித்தான் எல்லாக் கலைகளும் போய்க்கிட்டிருக்குன்னு. அது என்ன காரணம்னா நாதத்திலிருந்துதான்- “நாதபிந்து நீ ராமரூப முள”ன்னு மங்களத்தில பாடுவோம். அதுக்கப்புறம்தானே இந்த ஆடல் கலை. ஆடல் கலை எவ்வளவுதான் வசீகரம் பண்ணினாலும் நாதத்திலேயிருந்துதான் உருவமே வந்திருக்கு. அதனாலேதான். மகா சூட்சுமம். நாம பேசறதெல்லாம் ஆதார சப்தம். அடித்து எழுப்பப்படுகின்ற ஒலி. ரிஷிகளுக்கு அடிக்காமலே உள்ளுக்குள்ள மிருதங்கம் புல்லாங்குழல் எல்லாம் கேட்குமாம். ஏன்னா ஆகாசத்துல அது ஏற்கனெவே இருக்கு. அநாத ஒலி. ரமணர் சொல்றார். ஆசு கவியாகனும்னு. பக்கத்தில இருக்கறவர் சொல்றார், இதல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. முன்னோக்கி ஓடறது ஈஸி. பின்னோக்கி ஓடறதுதான் கஷ்டம். அன்லேர்னிங் ஈஸ் டிஃபிகல்ட். கடைசில எல்லாமே ஒரு திசையை நோக்கித்தான் போய்க்கிட்டிருக்கு. இவ்வளவு பேர் ரசிகர்னு இருந்தாலும் கவனிக்கறதுக்கு சாட்சியா இருக்கான்.

சில நாளைக்கு கச்சேரி பண்ணிட்டு வருவேன். ஒரு ஃபீலிங் வரும். எனக்குக் கூட இந்த அனுபவத்தைக் குடுத்தியேன்னு. அப்போ வராத சங்கீதம் வரும். சாரீர கலப்பில. ஒரு நிமிஷம் கண்ணீர் இருக்கே அதனோட பலன் என்னான்னா உடம்பு அப்படியே சுத்தம் ஆயிடும். நாடியெல்லாம் ஏதோ பண்ணி ஒரு ஆனந்தம். அதனாலே நான் நெனைச்சுக்குவேன். ரகசியமாவது நாம அழணும்னு. ஏன்னா என் மனைவி டெய்லி அழறது பார்த்தாள்னு வச்சிக்கிங்கோ. ஒரு நிமிஷம் அழ வேண்டாமா மனுஷன். அழுதால் அவனைப் பெறலாமேன்னா அனுபவத்தைத்தானே வார்த்தையா வடிச்சிருக்கு.

கல்லு மாதிரி மனசிருக்கு. நவநீத ஹிருதயம்-வெண்ணை மாதிரி மனசு வேண்டும்.

சங்கீத தென்னாட்டுக்கு ஒன்னு வடநாட்டுக்கு ஒன்னு மேல்நாட்டுக்கு ஒன்னுன்னு கெடையவே கெடையாது. முதல்ல அதப் புரிஞ்சிக்காதவன் வித்வானே கெடையாது. நான் சொல்றதையே தியாராகராஜ ஸ்வாமி சொல்லியிருக்கார் ஒரு கீர்த்தனத்துல. இந்த நாதங்களோடு உற்பத்தி ஸ்தானத்தை புரியாமல் பாடுபவன் பிறருக்குத் தீமை விளைவிப்பவன். இன்னொரு எடத்தல ”ஸ்வரங்கள் எல்லாம் சலங்கை கட்டிக் கொண்டு ஆடுகின்றன. வெறும் எலும்புக் கூடல்லன்னு. ஸ்வரங்கள். . . . .பேகடன்னா அதனொட வெயிட் எங்க இருக்குன்னா”

(ஸ்வரம் போடுகிறார்)

அப்புறம் உள்ள பண்றதெல்லாம் இன்ட்டீரியர் டெக்கரேஷன். இதுக்கு வந்து ஸ்ட்ராங் ஃபவுண்டேஷன் போட்டு-அதில்லாம என்ன பண்றது? அது மாதிரி ஒரு ராகத்தைப் புரிஞ்சுக்கணும். அடிப்படை சமாச்சாரங்கள். ஸ்ட்ராங்கா குரு கெடைக்கணும்.

ஆனந்த்: சைக்கோ தெரப்பி பண்ணின்டிருக்கேன்.

மனோதர்ம இசைங்கறது ஒரு ஸ்பான்ட்டேனிட்டிய கேப்சர் பண்றதுதானே.

மதுரை மணி அய்யர் சங்கீதத்துல ஒரு பெரிய உண்மை என்ன தெரியுமா? எவல்யூஷன் இன்வல்யூஷன். ஆரோகணம் எவல்யூஷன். புறப்பட்டு இறங்கி வர்றதில்லையா அது அவர் மியூசிக்ல பரிபூரணமா இருக்கும்.

(மணி அய்யர் மாதிரி ஸ்வரம் போடுகிறார்)

தம்பூராவுக்குள்ளேயிருந்து பிறந்து ஒரு உருவம் வந்து பாடி தம்பூராவுக்குள்ள போயிட மாதிரி. அவரு அப்படித்தான். அவரைப்பத்தி எனக்கு வேற எதுவும் சொல்லத் தெரியல. அப்படி ஒரு பிறவி. நான் அவரை பாக்கலே இல்லையா? அவரு ஒடம்பு நாதத்துனால ஆன ஒடம்பா? என்னப் பொருத்த மட்டில அவர் நாத சரீரம். இல்லைன்னா ஒரு மனிதனாலப் பாட முடியாது. நீங்க யார வேணுன்னாலும் போய்க் கேளுங்களேன். இந்த மாதிரி எங்களால முடியுமான்னு?

(மீண்டும் மணி அய்யர் போல ஸ்வரம் போடுகிறார்)

அது எப்படி இருக்கும்னா கல்லால வடிச்ச மாதிரி இல்ல, ஸ்படிகத்தினால வடிச்ச தெளிவு.

ஒரு முக்கியமான கதை. அவங்க மாயவரத்துல இருந்த போது வண்டி வச்சிக்கிட்டு-கார் எடுத்துக்கிட்டு திருவாவடுதுறைக்கு ராஜரத்தினம் பிள்ளை வீட்டுக்குப் போவாங்களாம். அவர் வீட்டுக்கு மணி அய்யர் போன உடனே அவருக்கு ஒரே சந்தோஷமாம். ”டே. அய்யா வந்திருக்காரு. அப்படின்னு சொல்லிட்டு என்ன ராகம் வாசிக்கணும் சொல்லுங்க. நாயனத்த எடுத்திட்டு வாடா” . அவர் கேக்கற ராகம் தோடி. இது கேட்டுட்டு செவி ஆறிட்டுப் போவாராம். மதுர மணிஅய்யர், ராஜரத்னம் பிள்ளை, இதுல நான் ஜி.என்.பி-யை சேத்துக்குவேன்.  இதெல்லாம் வெவ்வேற பரிணாமங்கள்தானே தவிர  எல்லாமே ஒண்ணுதான்.

(மீண்டும் மணி அய்யர் ஸ்டைலில் தோடி ஆலாபனையைப் பாடுகிறார்)

அதுக்குக் கொஞ்சம் பிர்காவாக் குடுப்பாரா-ஜி.என்.பி

(ஜி. என்.பி ஸ்டைலில் தோடி ஆலாபனைத் தொடக்கத்தைப் பாடுகிறார்)

பாடினார்னா அப்படியே தரையெல்லாம் அதிருமாம். எல்லாம் ஒண்ணுதான். ராஜரத்னம் பிள்ளையும் கேட்டுட்டா ஒரு நிறைவு. அவரைப் பத்தி இஞ்சிக்குடி சொன்னார். நான் சொன்னேன்: ஒரு ராஜரத்தினத்த உருவாக்கிட்டீங்கன்னா நான் தொழில விட்டுட்டு உங்க பின்னாடி வந்திருவேன்னு. ”அய்யா! அவுங்க பேரு சொன்னீங்கன்னா பத்து நாளைக்கு நாத ஸ்வரமே தொடமாட்டேன்”ன்னார். அவர் பத்தி ஒன்னு சொன்னாரு. சங்கல்ப ரகிதமா வாசிச்சாரு. வாசிக்கணும் அப்படிங்கற எந்த சிந்தனையும் கிடையாது. அது பாட்டுக்கு வரும். என்ன வரும்னு தெரியாது. ஆரோகணம் அவரோகணத்தை சம்பந்தமே இல்லாமயெல்லாம் வாசிப்பார். கேதாரம்னு வாசிப்பாரு. அதுல சங்கராபரணம்லாம் இருக்கும். ஆனா நீங்க சங்கராபரணம்னு சொல்லிட முடியாது. சட்டையை பிடிச்சிடுவார். அதாவது முழுக்க முழுக்க அது கேதாரமா கேக்கும். அவருக்கு ரூல்ஸ் எல்லாம் கெடையாது. ஆனாலும் அது ஒரு ஜீனியஸ். ராஜரத்னம் பிள்ளை மாலியப் பாத்து சொன்னாராம். ”தம்பி எனக்கப்புறம் நீதான்”. அந்த மாதிரியெல்லாம் பேரு வாங்கறதுன்னா சும்மாவா? அது மாதிரி மாலி, எம்.டி.யார் பத்தி சொன்னது. எம்.டி.யார் சின்ன வயசுல பாடிட்டு இருக்கார். மாலி கடைசில ஒக்காந்து கேட்டுட்டு இருக்கார். இன்னைக்கு ஜுனியர் ஸிங்கர்ஸ்ல இவர்தான் உத்தமமான பாடகர்னு சொன்னார். உடனே அங்கேயிருந்து வந்துட்டாராம் மாலி. சீனியர்லேயும் இவர்தான்னாராம். அந்த ஒரு ரெகக்னிஷன் வேணும். அனுபவம் பரிபூரணம்.

நாமெல்லாம் ஒண்ணுமே செய்யலியே!

இந்துஸ்தானி தோடி பாடி முடிச்சிடறேன். சிந்து பைவரவி தான் அவங்களுக்கு.

”எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ

சிந்தா குலமானவை தீர்த்து எனையாள் கந்தா

உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே

யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர்

தந்ததனால்

மதியால் உத்தமனாகி மனதால்”

இதுல ஒரு வார்த்தை நம்ம மனசுல தைச்சிடுச்சினா நம்ம உணர்வை பிடிச்சிரும்.

1-11

End of Interview

Posted in interviews | Tagged: , | Comments Off

நெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்/Interview with Neyveli Santhana Gopalan-Nangam Pathai

Posted by brammarajan on December 18, 2008

nr_santhanagopalan1

நெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்*

*This inteview was conducted exclusively for the Tamil little magazine ‘Nangam Pathai’. The first installment is being posted here. Since the interview lasted for more than 2 and half hours it is difficult to post it as a large lump.

PART-1

இன்றைய முதிய தலைமுறை இசைக்கலைஞர்களில் பக்தியையும் பாவத்தையும் இணைத்து வெற்றிகரமான கச்சேரிகள் செய்பவர் என்று பெயர் பெற்றிருக்கும் 47 வயதான நெய்வேலி சந்தான கோபாலன் நுண்மையும் தேர்ச்சியும் பெற்ற கேட்பவர்களையும் சாதாரண ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவரக் கூடியவர். வலுவான கலாச்சாரத்தில் ஆழ்ந்த குடும்பத்தில் பிறந்த சந்தான கோபாலன் அவரது தாயார் ஸ்ரீமதி ஜெயலஷ்மி அம்மாள் மூலம் கர்நாடக இசையின் ஆரம்பப் பாடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார், பிறகு செம்பை ஸ்ரீ ஆனந்தராம பாகவதர் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதன் ஆகிய இசை வல்லுநர்களிடம் இசை பயின்றார். தீவிரமான குருகுல பயிற்சியை மதுரை டி.என். சேஷகோபாலனிமிருந்து பெற்றார். மிக இளம் வயதிலேயே (10வயது) அவர் முதல் கச்சேரி செய்தார்.
சந்தான கோபாலனுக்கென்று ஒரு தனித்த முத்திரை இருப்பதை நுட்பமாகக் கேட்பவர்கள் அறிவர். ”இசைப் பேரொளி” ”கானப் பிரிய ரத்னா” போன்ற பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. ”பல்லவிகள் வழியாக ராகங்கள்” என்கிற கர்னாடக இசை அறிமுக கேசட் தொகுதிகளை பதிவு செய்துள்ளார். சமீபத்தில் ஸ்ரீ சந்திர சேகர நாத பாட சாலா என்ற அமைப்பின் வழியாக மரபான கர்னாடக இசையை எல்லோருக்கும் சென்று சேரும்…. திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

தொடர்பு முகவரி

Neyveli Santhanagopalan
Periaya Pichai
1, V.C. Naicken Street Extn.
Nesapakkam
Chennai – 600 078
email: neyveli@indiamusicinfo.com
www.neyvelisanthanagopalan.com

இந்த நேர்காணல் பெப்ருவரி-6 ஆம் தேதி மாலை 4.15 மணி அளவில் ராமாவரம் பகுதியில் உள்ள கர்னாடக இசைப் பாடகரான திரு. நெய்வேலி சந்தான கோபாலன் வீட்டில் நடைபெற்றது. பிரம்மராஜன், ஆனந்த், மையம் ராஜகோபாலன், பழனிவேள் ஆகியோர் பங்குபெற்றனர். நேர்காணல் ரெக்கார்ட் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு மீண்டும் கேட்டு எழுதப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது. நேர்காணலின் போது ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்து சோஃபாவுக்கருகில் தரையில் அமர்ந்திருந்தார் சந்தானகோபாலன். கேள்விகள் எல்லாம் தன்னிச்சையாய் எழுந்தவை. முன் தயாரிப்பினால் உருவானவை அல்ல. நேர்காணலில் பேச்சு விவாதங்களுடன் தொடங்கினாலும் குறிப்பிட்ட புள்ளியில் கேள்விகள் அடங்கி ஒரு வித நேர்க் கோட்டுப் பயணம் மட்டுமே நேர்ந்தது. இடையிடை யில் அவர்களது துணைவியார் திருமதி. மீரா கலந்துகொண்டார்.

பழனிவேள்: நீங்க ஒரு முக்கியமான ஆகிருதின்னு நினைக்கிறோம். உங்களைன்னு நாங்க கேட்கிறது நடப்பு இசை சார்ந்த சூழலையே மையமிட்டு கேட்கிற மாதிரி, தனிப்பட்ட முறையில் அல்லாமல் பொதுவாக நீங்க ஒரு கலைஞன் என்கிற வகையில் கேட்கிறோம்.

ஆனந்த்: ஒரு பாடகர் என்பதற்கு முன்னதாக இசையைக் கேட்கிற ரசிகராக நீங்க உங்களை எப்படி பாத்துக்கிறீங்க, அப்படி ஆரம்பிக்கலாமா பேட்டியை அப்டின்னு…

ச.கோ: நிச்சயமா, இந்த சரீரம், இந்த சரீரத்துக்குள்ள ஒரு நாதம் உருவாகுது. சரி அதுவரைக்கும் சரி, அது பேசிக் தத்துவம். அதுக்கப்புறம் இந்த ஏழு ஸ்வரங்கள் கொடுத்தவர், குரு சொல்லி குடுக்கிறார் ஏழு ஸ்வரம் இருக்கு அதுலதான் ராகம் இருக்குங்கிறார். இப்படி அங்கேயிருந்துதானே ஒரு கேள்வி ஞானத்திலதான் நாமே உருவாகிறோம். ஒவ்வொரு அணுவும் ஒரு கேள்வியை காதால வாங்கி – ஒரு ரசிகன்கிற முறையில் வாங்கினதாலதானே, குருகிட்டேருந்து கத்துகிறதே என்னது? ஸ்டூடன்ட்ங்கிறவன் யாரு? ரசிகன்தான்தானே. அதனால முழுக்க ரசனையை அடிப்படையா வச்சுதான இந்த கலையே உருவாகுது. இப்ப நாம பாடிண்டேயிருக்கோம்னு வச்சுக்கோங்களேன், நாம பாடிண்டிருக்கோம்கிற நிலைமையிலேயிருந்து வெளிய வரதுக்குதான இவ்வளவு கஷ்டம். the take off point எவ்வளவுநாள் நான் அதப்பண்ண போறேன் இதப்பண்ணப் போறேன்னு ஈகோ வச்சுண்டு உட்கார்ந்துண்டிருக்கறது? சரீர சிரமங்கள் இருக்கு. ஒரு stage க்கு மேல take off point வந்துடறது. வந்தப்புறம் என்ன ஆறது? அந்த ரசிகன்கிற பாயிண்ட் அதிலேயே இருந்துதான் ரசிச்சிண்டு இருக்கு. இதை அடையறதுக்குதான் இவ்வளவு சிரமப்படறோம். அதுதான் உண்மை.
சமீபத்துல பட்டம் ஒண்ணு குடுத்தாங்க. அதை வாங்கிண்டதே ஒரு வெக்கத்தோடதான் வாங்கிண்டேன். என்ன காரணம்னா மத்தவாள பெருசா பாத்து பழகிடுத்து. என்ன ஒரு பத்து பேரு பெருசா நினைக்கிறாளேன்னு கூச்சமா இருக்கு, அதுக்கு ஒரு பழக்கம் வேணும்.

ஆனந்த்: ரொம்ப ஒரு strength இருந்தாத்தான் அந்த கூச்சத்தைப் பட முடியும்.
ச.கோ: நிஜம்மாவே. இப்ப ஒரு பெரியவர் வந்து நமக்கு குடுக்கிறார்னு வச்சுக்கோங்களேன். சகல தகுதியும் உனக்கு இருக்குன்னு அவர் சொல்லலாம். இந்தப் பட்டத்தை உனக்கு குடுப்பதன் மூலம் சகல தகுதிகளும் ஏற்படட்டும்னு சொன்னா வாங்கிக்கலாம். அந்த மாதிரி சிருங்கேரி பெரியவர்கள் சொன்னாங்க. அதனாலதான் ஆஸ்தான வித்வான் பட்டம் வந்தது. அது மனசுக்கு ஏத்துக்கிற மாதிரி இருந்தது. இருக்குன்னவுடனே என்ன இருக்குன்னு தோணிடுது. ஒண்ணுமே இல்லைன்னு தோணிப்போயிடுது. இப்படி சில குழப்பங்கள். ரசிகனா இருக்கிறதுல அவ்வளவு ஒரு ஆனந்தம் இருக்கு. நாமலே அதுல இல்லையே !
ஆனந்த் : ஆமாம்.

ச.கோ: இல்லையா? நல்ல கேள்வி நல்லா தொடங்கினீங்க. இன்னொன்னு பாருங்கோ.. அதுல ஒரு அசைவு. நேத்திக்குப்ப பாடின ராகம் இன்னிக்குப் பாடறோம். என்னைக்கும் இருக்கிற ராகத்தைத் திரும்ப பாடறோம். நேத்து எண்ணை தேச்சுக் குளிக்கும்போது உடம்பு குளுந்து போய் ஒரு சங்கராபரணம் ஆரம்பிச்சேன். அந்த சங்கராபரணம் இதுவரைக்கும் நான் கேட்கவேயில்லை.
என் மனைவி கிட்ட நான் சொன்னேன் ஃபூலூட் மாலி இந்தமாதிரி approach ல போயிருக்கலாம். ஆனா அவருக்கு கூட இந்த சங்கதிகள் கிடைச்சிருக்குமான்னு தெரியாது. ஆனா அவர் அந்த மாதிரி தொடுவார். அவங்க வேற யாரோ ஒரு கலைஞரை சொன்னாங்க. ஆனா நிச்சயமா அவங்க குரூப் இல்ல அது. (மனைவியிடம்)எது உண்மையோ இல்லையோ இந்த சங்கராபரணம் இதோட சரி. நீ மட்டும்தான் கேட்டிருக்கே. திரும்ப வராது. திரும்பி வருமான்னு தெரியாது. உண்மை. அதுபாட்டிலும் போறது. கட்டவிழ்த்த காளை மாதிரி போறது. அது கச்சேரில கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அது எப்பவாவது கிடைக்கும்.
கேள்வி: ஒவ்வொரு கச்சேரியிலும் நீங்க பாடற போது கூடவே நீங்களும் ஒரு ரசிகனா…

ச.கோ: ஆமா. என்னன்னா.. கல்பிதம் கல்பனைன்னு சொல்லுவா பாருங்கோ.. அதாவது சொல்லிக் குடுத்தது, கத்துக்குடுத்தது சேரணும். அது வேணுமே! அதுதான அடிப்படை. அதில்லாம போனா ஆதாரமேயில்லை. ஆனா இது சம்பாதிச்சுக்கறது. கற்பனை. மனோதர்மம்கிறா சங்கீதத்துல தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட அறவழி.
இந்த சங்கீதத்தோட உன்னதங்கள் எங்கெங்கே இருக்குன்னு பாத்தா.. ஒண்ணு மும்மூர்த்திகள். சங்கீத மும்மூர்த்திகள். அவா பக்தியையும் சங்கீதத்தையும் இரண்டையும் உச்சத்தில போய் sanctify பண்ணிட்டா. சங்கீதம்னா இப்படித்தான் இருக்கும்னுட்டு. அதோட முடிஞ்சுடல. அதுக்கு முன்னயும் சங்கீதம் இருக்கு அதுக்குப் பின்னயும் இருக்கு. தஞ்சாவூர் சங்கரய்யர் கேப்பார்… உனக்கு 50 கீர்த்தனைகள் தெரியலாம். ஆனா உனக்குத் தெரிஞ்ச பைரவியைத்தான நீ அதுல பாட போறம்பார். தீக்ஷிதரை நீ எங்க புரிஞ்சுண்டே.. நீ தீக்ஷிதரா அந்த இடத்தில மாறினாத்தான முடியும்?
சங்கீதம் எங்க இருக்கு? அவா சொல்ற விஷயம் என்ன? அதுல போறவா ரொம்ப rare. சிலபேருக்குதான் அந்த பாக்கியம் கிடைக்கிறது. ஆழமா உள்ள போறதுக்கு. அதுக்கு சில சங்கங்கள் ஏற்படணும். அந்தமாதிரி மனுஷாள்ட்ட பழகணும். அந்தமாதிரி நம்மைத் தூண்டக்கூடிய மனுஷா நமக்குக் கிடைக்கணும். இல்லையா. நம்ம எந்த வழியில கொண்டு செலுத்தறாளோ அப்படித்தானே போறோம்.
சங்கீதத்துல பல ப்ராஞ்ச் இருக்கு. வாழ்க்கைத் தத்துவம் அவ்வளவுமே அதுல இருக்கு. சங்கீதம் சங்கீதம்னு கடைசியில அது மௌனத்துல கொண்டு போய் முடிச்சுடறது. இதுக்கு என்ன சொல்றீங்க! அமைதியா இருந்தா போதும்னு மனசுல தோணிடுது.
எனக்கு வழிகாட்டிகள்னு நிறைய பேர் இருந்தா. தஞ்சாவூர் சங்கரய்யர்னு ஒருத்தர். ஒரு கம்போசர். ஸ்கூல் படிப்பு கிடையாது. அவரோட first and foremost quality என்னன்னா.. அவர் உங்களோட vibe பண்ணுவார். அவர்கிட்ட பழகறப்பதான், பல அப்ரோச்சஸ் இருக்கு எல்லாத்துக்குமே அப்படின்னு புரிஞ்சது. அவர் ஒரு பாட்டு போடும்போது ஒரு குழந்தை நிலையிருந்து போடறார், ஆனா அது பெரிசாயிடறது.

ரா.கோ: இதெல்லாம் என்ன மாதிரி வயசுல?

ச.கோ: ஒரு 20-30 வயசுல, குருகுலவாசம் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம். சின்ன வயசுல நானே பாட்டு போட்டிருக்கேன். ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு இதெல்லாம் பார்த்தா. என் பொண்ணு ஒரு கேள்வி கேட்டா. ம்யுஸிக்ல ரொம்ப டெக்னிகலா, டீப்பா போனப்புறம் முன்னுக்குப் பின் முரணா சிலசமயம் பேசறே. ஆனா அம்மா சொல்றா அப்ப பார்த்த அப்பாவே வேற இப்ப வேற மாதிரி இருக்கான்னு. என்ன சமாச்சாரம்னா- பக்தின்னு ஒன்னு இருந்த வரைக்கும் எனக்கு எந்த குழப்பமும் இருந்தது இல்லை. பக்திலேயிருந்து வெளிய வந்தப்புறம், மனசுல, தானே தீர்மானம் பண்ண வேண்டிய ஒரு கட்டம். பக்தின்னா என்ன? ஒரே குருட்டு நம்பிக்கை, பெரியவாள்லாம் போட்ட பாதையில போயிட்டேயிருக்கோம். இப்ப நீங்க கேட்கலாம்.. அந்த பாரம்பர்யத்திலேருந்து வந்துட்டேளான்னு. வெளில வர ஆசைப்படல, அதேசமயம் பாரம்பர்யத்தை அவமதிக்கல. ஆனா, தானாவே ஒரு Branch, branch out ஆயிண்டிருக்கு. அதுக்கு நான் மதிப்புக் குடுத்தாகணுமே. நாச்சுரலா ஒரு ப்ராஞ்ச் வரும்போது என்ன நம்ம மனசுக்கு இப்படிக் கொண்டுபோறதே சத்தியம் இருக்கான்னு தேட வேண்டாமா? இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தா எப்படி? இது மாதிரி உள்ளுக்குள்ள ஒரு creator உட்கார்ந்து ஊக்குவிச்சிண்டே இருக்கான். நீ என்ன பண்ண போற? ஒவ்வொருத்தரும் ஒண்ணு பண்ணிட்டுப் போய் சேர்ந்தாச்சு. நீ ஏதாவது ஒண்ணு பண்ணித்தான் ஆகணுமா?-ன்னு. இதுக்கெல்லாம் மீறி நீ இப்படித் தான் போயாகணும் வேற வழியில்லன்னு ஒரு பதில் வருது. உன்ன இப்படித்தான் நான் படைச்சிருக்கேன், இப்படிபோயிண்டிருக்கு, அந்த இதுல போயிண்டிருக்கேன். அது வரதுக்கு இவ்வளவு நாளாச்சு. இதுதான் ரூட். இதை பணிவா சொன்னாலும் சரி ego வோட சொன்னாலும் சரி இரண்டும் ஒன்னுதான்.
Humility யே வேண்டாம். உண்மையைச் சொல்லு. சத்தியத்துக்கு என்ன வேண்டியிருக்கு? சத்தியத்தில எல்லா பண்புகளும் அடக்கம், இல்லையா?
சில நாள் காலைல எழுந்து சில உறுதிமொழிகளை நான் பண்ணிப்பேன், நாம இன்சொல் பேசணும்.. ஏன்னா ஒருத்தர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கொஞ்சம் harsh ஆ பேசிட்டான்னா. . .அவனோட தபஸ்னு சொல்ற. . . சின்ன தவம்கூட எல்லாம் ஒடைஞ்சு போயிடறது. இன்சொல்தான் ரொம்ப முக்கியம். எவ்வளவு கஷ்டத்திலயும் இனிமையாதான் பேசணும். இன்சொல்லோட பண்புகள் என்னன்னு பாக்கும்போது diplomacy ன்னு ஒண்ணு.. ஒவ்வொரு குணமா சேர்றது. கடைசில எல்லாம் சத்தியத்துல போய் ஐக்கியம் ஆறது. சத்தியமான ஒரு பாதையை ஒருவன் தேர்ந்தெடுத்துட்டா எல்லாவிதமான அனந்தகல்யாண குணங்களும் வந்துடறது அப்படிங்கிறது முடிவு. ம்யுஸிக்லயும்… ம்யுஸிக் அன்போட மொழின்னு பெரியவா ஒரு இடத்தில எழுதியிருக்கார். அன்போட உச்சகட்ட வெளிப்பாடு. இது எனக்கு ரொம்ப பிடிச்சது, ஏன்னா. . அவர் அன்பின் சொரூபமாவே இருக்கிறவர். இசையை விளக்கிறவன் எப்படி இருக்கணும்னா. . .அவன் உயர்ந்த நிலைமையிலேயிருந்து இசையைப் பார்க்கணும். அவன் சொன்னா அதை எடுத்துக்கலாம் ஒரு reference- ஸா. அதவிட்டுட்டு ஒரு கத்துக்குட்டி இருக்குதுன்னு வச்சுக்குங்க. . . I want to see all the stages in the world ன்னு. இசை அதுக்குத்தான் இருக்குன்னு நினைச்சுண்டு இருக்கும், இப்ப ஒரு மகான் சொன்னது என்ன? அன்பின் மறுமொழி, உச்சகட்ட வெளிப்பாடு. அப்ப அதுக்கு முயற்சி பண்ணணும். நீங்க எழுதியிருக்கீங்க பாருங்க படைப்பாளி படைக்கும்போது நன்னா இருக்கு. வெளிய வந்தப்புறம் கவிதை அவனை வெளியத் தள்ளிடறதுன்னு. இந்த ஒரு கட்டம் வரப்படாதே! அப்ப அது எங்கேயிருந்து வருது?
டெல்லி ராகவன் சொன்னது, அருணகிரிநாதர்ல ”வினாவோடு பாட அருள்வாய்”னு ஒரு இடத்தில் வருது. நான் ஏன் பாடிண்டிருக்கேன்னு நானே கேள்வியைக் கேட்டுண்டு பாடணும். அதுக்கு நீ உன்னோட அனுக்கிரகத்தைப் பண்ணணும். எப்படியிருக்குப் பாருங்கோ இது? ஒரு லைன் எடுத்துக் குடுத்தார் எனக்கு, பெரிய உபதேசம் அது. . . . வினான்னா என்ன சந்தானம்னு கேட்டார். நீ எனக்குள்ள கேட்டுக்கோ. நீ எதுக்காகப் பாடற? மஹா பெரியவா உபன்பயாஸம் ஒண்ணுல கேட்டேன். எனக்கு ஒரு நல்ல விடை கிடைச்சது. அவர் சொல்றார்: இறைவனுக்கு செய்யற எந்த உபசாரமும். ஒரு உத்தரிணி ஜலத்தைப் போட்டா அவரோட உருவத்துக்கு அது ஒன்னுமேயில்லை. குளிப்பாட்டறேங்கிற. அது தண்ணி தெளிக்கிற மாதிரி. அதே மாதிரி வஸ்த்ரம் குடுத்தா கௌபீனத்துக்குகூட ஆகாது, எதை எடுத்துண்டாலும். திரிவிக்ரமன் உலகளந்தவன். அவனுக்கு நீ என்ன பண்றது? இப்படியெல்லாம் வரும்போது, அவன்கிட்ட நீ என்ன கேட்க முடியும்னா.. ”என்னை எனக்குத் தா”ன்னுதான் கேட்கணும். . என்னுடைய சொரூபம்னு ஒன்னு இருக்காமே? அதை இழந்துட்டுத் தவிக்கிறேன். அதை எனக்குக் குடு, so அந்த aim வச்சுண்டு பாடிண்டிருக்கணும்கிறது என்னோட அடிப்படை . என்னோட சொந்தப் பாதை. சொந்தப் பாதைல போகும்போது இது இல்லேன்னு வச்சுக்கங்களேன். உலகத்துக்கு என்ன உபதேசம் பண்ணியும் அது எனக்குப் பிரயோஜனம் இல்லை. எடுத்தப் பிறவி அதோட பயன். அந்த நோக்கத்தை set பண்ணிட்டுத்தான் உலகத்துக்கு சேவை பண்ண ஆரம்பிக்கணும். அதுகூட incidental-லா வரதுதானே! சேவைன்னு நம்பள இந்த ரூட்ல கொண்டுபோய் விடறது..நான்தான் சேவை பண்றேனா? வேற யாரும் சேவை பண்ணலயா? சும்மா இருக்கவனே நல்ல சேவை பண்றான். இப்படி ஒரு ரூட்ல போயிட்டிருக்கேன். இதுல கீழ தடுக்கி விழறது திரும்ப எழறது, தடுக்கி விழறது, எழறது இப்படித்தான் போயிண்டிருக்கு.
perfection எங்கேயோ இருக்கு, ஒரு தொலைவுல. அதை யார் குடுப்பான்னா குருங்கிற ஒரு தத்துவம். மஹா பெரியவாளை மனசுல வச்சுண்டு இருக்கேன். உள்ளுக்குள்ள இடைவிடாத ஒரு சந்தோஷம் இருந்துண்டே இருக்கு. தோல்விகள் வெற்றிகள் இருந்தாலும்கூட, அதுக்கு மேல பலனைக் கொடுக்கக்கூடிய ஒருவர் இருக்கார். அவர நம்பி நாம பண்”ண்டு இருக்கோம். அப்படிங்கிற சரணாகதி தத்துவம். இது ஒரு சின்ன விஷயம். ஒரு சின்ன அளவுல இதுதான் basis நமக்கெல்லாம். நாம எவ்வளவு வேணும்னாலும் பாடலாம். ஆனா, எது பாடுகிறது? எதற்காகப் பாடிக்கொள்கிறது அப்படிங்கிற ஒன்னு இருக்கில்லையா? இசைங்கிறதே ஒரு இன்ப மாயை. அப்படிங்கற அளவிலேயே நின்னுடக்கூடாது. இன்ப மாயைன்னு சொன்னா, கேட்கிறவரைக்கும் நல்லா இருக்கு. கேட்டப்புறம் ஒரு வெறுமை வந்துடறது. சுகமும் துக்கமும் மாறி மாறி வரதுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒருத்தர் ஒரு கச்சேரிக்குப் போயிட்டு வரார். கல்யாணி” ஒருத்தர் பிரமாதமா பாடியிருக்கார். அவரோட favorite வித்வான். வீட்டுக்கு 10 மணிக்கு வந்து மனைவிக்கிட்ட “இன்னிக்கு நீ ஒரு கல்யாணி”யை மிஸ் பண்ணிட்டேம்மா”"ன்னு சொல்றபோது, “தூக்கம் வருதுப்பா. காலைல குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும். சீக்கிரம் சாப்பிட்டு போங்க”"ன்னா மனசுல துக்கம் வந்துடறதாம். ஆனாலும் அந்தக் கல்யாணியே சுத்திண்டு இருக்காம், படுத்துண்டப்புறமும். 12 மணி வரைக்கும் அந்தக் கல்யாணியை வைச்சுண்டு அப்படியே இருக்கமாட்டமான்னு. தூக்கம் வரலைன்னா உடனே கொஞ்ச நேரம் இந்தக் கல்யாணி”யை மறக்க மாட்டமா? கொஞ்சம் தூங்கினா பரவாயில்லைன்னு ஆயிடறது. காலைல office போனா பாஸ்கிட்ட திட்டு வாங்க வேண்டியிருக்கும். இப்படி சுகமே சில சமயங்கள்ல துக்கமாயிடறது. இசையே நிரந்தர ஆனந்தத்திற்கு ஒரு கருவியாக பெரியவர்கள் காட்டிக் கொடுத்திருக்காங்க. நாத உபாசனை. ஓங்காரம்கிற ஒன்னுதான் நிக்கிறது. அது மனசுல ஆணி அடிச்சாப்ல நிக்க முடியாதுங்கறதால, அதை ஏழு ஸ்வரங்களா பரிமளிக்க வைச்சு அதை ஒரு சாஸ்திரமா குடுத்திருக்காங்க. மனசுக்கு பலவிதமான விசித்திர உணர்வுகளைக் கொடுத்து, பாவங்களை – சாந்த பாவங்களை குடுக்கணும். நம்ம சொரூபத்தை உணரணும். அப்படிங்கற பிரதான தத்துவம். இதை நான் சுத்தி சுத்தி சொல்லிண்டிருப்பேன் போற இடத்தில எல்லாம். ஏன்னா, எனக்கு நான் அறிவுறுத்திக்கனுமே! வேற எதாவது பேசி நான் மறந்துட்டா என்ன பண்றது? அந்த நிலைமைக்காவது வந்திருக்கோம். ரமணர் சொல்றார், பெரிய பிரம்மஞானியா ஆயிடு, ஆனப்புறம் விளையாடுங்கறார். ஆனப்புறம்தான விளையாடுங்கறார். ஒரு கோணத்துல மீரா சொல்றா, ஏந்தான் இதெல்லாம் படிச்சேளோ! நீங்க கச்சேரில ஜாலியா பாடிண்டிருந்த வரைக்கும் நன்னாயிருந்தது. இப்ப வாயைத் திறந்தா தத்துவம். ரொம்ப பயமாயிருக்கு, நாளைக்கு கச்சேரி பண்ணுவேளோ மாட்டேளோன்னு. ஒன்னேயொன்னு சந்தோஷம் என்னன்னா, இப்படி யெல்லாம் விஷயங்கள் இருக்குங்கறது நான் தெரிஞ் சுண்டேனே! பரிணாம வளர்ச்சி இல்லாம இப்படியே போயிண்டிருந்தா…?

ர.கோ: ரசனைன்னு பேசறபோது, சின்ன வயசுல இசையை நோக்கி ஆகர்ஷிச்சது எது?

ச.கோ: அதை சரியா define பண்ண முடியல. அது எப்படின்னா. . .அதைப்பத்தி . . . யதார்த்தமா உங்ககிட்ட கேட்கிறேன். ஞானசம்பந்தர் இருந்தார், தியாகராஜ ஸ்வாமிகள் இருந்தார் இவாள்ளாம் முழுக்க முழுக்க இசையா இருந்திருக்கா. . .நான் சின்ன வயசில சூரியன் அடையறவரைக்கும் விளையாடிட்டு வந்திருக்கேனே! அப்ப இசை இயற்கையாவே இருந்திருக்கு என் மனசுக்குள்ள. எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் அந்த ஆசை இருந்திருக்கு. அந்த ஆசை எனக்கு transfer ஆயிருக்குன்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு stageல பிடிச்சுண்டுடுத்து. அது என்னோட பெருமையோ எதுவோ கிடையாது, அது சப்ஜக்ட்டோட பெருமை. Of all the subjects, music is the foremost which enthuses me the most. I can sacrifice any Anandham for that. அது மட்டும் நிச்சயம். மறுபடி தத்துவநோக்கில ஒரு இன்பத்தை, ஒரு சாஸ்வதமில்லாத இன்பத்தை நீ இழக்க வேண்டுமானால், சாஸ்வதமுள்ள அடுத்தக் கட்ட ஒரு இன்பத்திற்கு ஆசைப்பட்டா இது தானாவே போயிடும். அதுதான் ஒரே வைத்தியம். இதை என்ன சொல்றா…. transcend the desires. You cannot conquer ஜெயிக்க முடியாது ஆசைகள, பி.ஜி. விஸ்வநாத் சொல்வார். . . ரொம்ப பிடிச்ச விஷயம். சங்கீதத்தை வைச்சுண்டுதான் மத்ததெல்லாம், ஆசைகள்ளேயிருந்து கொஞ்ச கொஞ்சமா விடுபடணும். இது அகண்டமான திட்டம் எத்தனை ஜென்மத்துக்குப் போகும்னு தெரியாது. ஐந்தாண்டு திட்டம் இல்ல ஐந்து ஜன்மா ஐம்பது ஜென்மா திட்டம்.
கே: திருவருள் பத்தி சொல்லும்போது . . . உங்க உணர்ச்சி கொந்தளிப்பு எப்படியிருந்தது? அப்ப என்ன மாதிரியான கீர்த்தனைகள், ராகங்கள் அப்பியாசம் பண்ணீங்க?

ச.கோ: அப்ப நல்ல ஒரு சூழ்நிலை. என்ன பண்ணுவோம்னா, மத்தியானம்ஒரு 12 மணிக்கு எல்லாரும் தூங்கிண்டிருப்பா. அம்மாகிட்ட சொல்லாம- ரங்கநாயகின்னு ஒரு மாமி இருப்பா-அவா ஆத்துல எப்ப போனாலும் பாடலாம். பாட்டைப் பத்திதான் பேசிண்டிருப்பா. அங்க போயிடுவேன். சரி அங்கதான் இருக்கான்னு தெரியும். அந்த மாதிரி சூழ்நிலை. வெங்கிட சுப்பிரமணின்னு ஒருத்தர் இருந்தார். அவர் எப்படின்னா.. அங்க வேலை பாக்கிறவர். வித்வான் தோத்தான். அங்க வேலை பாக்கிறவர்தான் ஆனா வித்வானுக்குள்ள சகல லட்சணங்களும் பொருந்தியவர். வெத்தில பெட்டிலேயிருந்து சகலமும். ராத்ரி 10 மணிக்குப் போனாலும், “ஏய், சந்தானம் வந்திருக்கான் வத்தக் குழம்பும் பருப்புத் துவையலும் பண்ணிவை. நாங்க ஒரு மணிநேரம் பாடப் போறோம்பார்.” மாமியும் பண்ணுவா.
இந்த மாதிரி நம்பள பாராட்டக்கூடிய இடத்துக்கு யார்தான் போக மாட்டா சின்ன வயசுல? கச்சேரி commitmentடெல்லாம் ரொம்பக் கிடையாது. எங்க அப்பா promote பண்ணத் தெரிஞ்ச area வந்து சிதம்பரத்திலிருந்து கடலூர் வரைக்கும்தான். மெட்ராஸ் தெரியலை.

கே: இது எந்த வயசில?

ச.கோ: எட்டுலேருந்து பன்னெண்டு. பன்னிரண்டு வயசுல இங்க வந்து பாடினேன். அது ஒரு அனுபவம். அப்ப டிவி கிடையாது. ராஜகோபாலன் தெருல, இப்பவும் சொல்லுவாங்க. அங்க சபா நடத்துறாங்க ஸ்ரீரஞ்சனி ட்ரஸ்ட். அப்ப வந்து மாஸ்டர் சந்தானம். தெரு அடைச்சு பந்தல். ஐயப்பன் உத்சவம். முதல்ல பத்து பேர், 6 மணிக்கு. அப்புறம் 20 பேர், 30 பேர், 40 பேர். அப்புறம் கேள்விபட்டு கேள்விபட்டு தெருவே ரொம்பி, என்னை தலைல வைச்சு அழைச்சுண்டு போனா, நடக்க முடியாம. இப்ப அந்த இடத்தில டிவி எல்லாம் வந்தாச்சு கூட்டம் சுமார், ஓரளவுதான் வருது.

ஆனந்த்: அது உண்மை.

ச.கோ: அதுக்கப்புறம், தொண்டையெல்லாம் மாறி. . .அப்புறம் கத்துக்கறதுல இன்ட்ரஸ்ட் வந்தது, கச்சேரி பண்ணணும்கிறதுல ஆர்வம் குறைஞ்சு. இப்ப என்னன்னா என் மனைவி மீரா சொல்லுவா, நீங்க பாடும்போதுதான் உங்களோட ஒரு முழுமை கிடைக்குதுன்னு. ஏன்னா, நீங்க ஒரு வியத்தை learn பண்ணும்போது ஏதோ ஒன்னை கத்துக்கணும்கிற aim தானே இருக்கு. அடைஞ்ச முழுமை இல்லையே! அங்க உட்காந்தவுடனே டோக்ரி மாதிரி கையைத் தூக்கிடறோம். நமக்கு என்னத் தெரியுமோ தெரியாதோ, நான் இப்ப செயல்படணும். அங்கதான் நம்ப முழு personality கிடைக்கிறது. அதை பரிபூர்ணமா ஒத்துக்கிறேன். எல்லோரும் சொல்வாங்க, கத்துக்கும்போது ரொம்ப ஆனந்தமா இருக்கு, கத்துக்குடுக்கும்போதும். இரண்டிலேயும் ஒரு அரைகுறைத்துவம் இருக்கு. When you perform அரைகுறையோ இல்ல முழுமையான வித்வானோ perform பண்ணும்போது தான் முழு expression வரது. இல்லையா?
என் பொண்ணே இருக்கான்னா, என் முன்னாடி பாடினா கொஞ்சம் சுமாராதான் பாடுவா. ஆனா கச்சேரி போய்ட்டு வந்தாள்னா என்ன உங்க பொண்ணு அப்படி … . .அப்படிம்பாங்க. அது என்ன காரணம்னா freedom to express.. வாத்தியார் முன்னாடின்னா அடக்க ஒடுக்கமா பாடணும் என்ன சொல்லிடுவாரோன்னு. அங்க போர்க்களத்தில ஒப்பாரி வைக்க முடியாது. போனமா ரிஸ்க் எடுத்து அம்பை விடு. அதுதான் விஷயமே! இந்த art, practical art. என் வாத்தியார் சொல்வார், வாத்தியார் எனக்குக் குடுத்த சர்டிஃபிகேட் ஒண்ணு உண்டு. இதுதான் ஏரோப்ளேன்னு explain பண்ணின்டே இருக்கும்போதே, கேட்டுண்டே இருப்பான் அப்படியே ஏறி ஓட்டிண்டு போயிடுவாம்பார். அப்படி இருந்தாத்தான் மேடையில பாட முடியும். வேற வழி கிடையாது. சின்ன வயசிலிருந்து எனக்கு மேடை அனுபவங்கள் ஸ்வாமி கொடுத்ததுதான்.
கே: ஆடியன்ஸ் என்னமாதிரி இருக்காங்கங்கிறது எந்த அளவு உங்களுடைய அன்றைய performance-ஐ influence பண்றது/ தீர்மானிக்கும்?
ச.கோ: ரொம்ப பாதிக்கும் அது. ரொம்ப பாதிக்கும். அதனாலயே பாதிநேரம் கண்ணை மூடிண்டு பாடிடறது. ஒரு வைப்ரேஷனை அவா செட் பண்ணிக் குடுக்கணும். அந்த அரங்கம், அரங்கத்துள்ள நுழையறதுலேயிருந்து அதன் தன்மைகள், ரொம்ப பாதிக்கும்.

பி.ரா: உங்க உள்ளுணர்வால ஆடியன்ஸோட இதை easyயா gauge பண்ண முடியுமா?

ச.கோ: அற்புதமா வரும். perfect ஆக இருக்கும். உண்டு. இப்பல்லாம்தான் இது ரொம்பத் தெளிவா வருது. நாம அவாளை அப்படியே பிரதிபலிக்கனும். நமக்குன்னு ஒரு சொந்த இது வேண்டாம், அப்படியே பிரதிபலிச்சுண்டு போனா. என்னப்பாட போறோம்னுகூட தெரியாது. என்ன கீர்த்தனை எடுத்துக்கப் போறோம்னு தெரியாது. சங்கராபரணம் பாடி முடிஞ்சதும், த்விஜாவந்தி பாடணும்னு ஒரு அம்மா கேட்டாங்க. ஒரே காந்தாரம்தான் பிடிச்சேன். நான் சொல்லிட்டேன், பாருங்கோ அவசரப்படாதீங்கோ. இந்த காந்தாரம் சங்கராபரணம்தான். அடுத்தப் பிரயோகம் பாருங்கோ திவஜாவந்தி வரப்போறதுன்னேன். அவாள்லாம் ஒரே ஜாலியா பேசி அந்த ராகத்தை ரொம்ப நன்னா பாடி- தேஜஸ்ரீன்னு ஒரு கீர்த்தனம்-ஒரு விவரிக்க முடியாத ஆனந்தம். என்னன்னா. . .கேட்டவா எல்லாருக்கும் அவாளே பாடின மாதிரி ஒரு ஆனந்தம். அது வேணும். சங்கீதத்துல டெக்னிகலா ஏதோ இருக்கு போலிருக்கேன்னு பயப்பட வச்சுட்டடோம்னா, ரசனை போயிடறது. நம்பளே பயந்தாலும். பயம் வந்த இடத்துல ரசனை போயிடறது. ஆடியன்ஸ்க்கு ஐயோ இதை ரொம்ப புரிஞ்சுண்டாத்தான் கேட்க முடியும்கிற மாதிரி வைச்சாக்கா. . .என்னைக்கு அவனை ரசிக்க வைக்கறது? அதனால, பிரதானமா, உன்னோட technical knowledge எல்லாம் உள்ள வைச்சுக்க. வெளிய இது பண்ணாத.
(ஒரு தொலை பேசி குறுக்கீடு)

ச.கோ: ஒரு கச்சேரிக்கு முன்னாடி இதெல்லாம் இன்னிக்குப் பாடப் போறோம்னு ப்ளான் பண்ணிண்டு போறது அப்பிடின்னு எதவாது உண்டா?
ச.கோ: சில நாளைக்கு வரும். சில நாளைக்கு பிரமாதமா வருது, சில நாளைக்கு ஒண்ணுமே தோணாது. ரொம்ப ஆச்சர்யம் என்னன்னா. கச்சேரி வர நாளை வரவேற்பேன். ரெண்டு காரணம். ஒன்னு வீட்டுல ராஜ உபசாரம் நடக்கும். அப்புறம், ஸ்வீட்டெல்லாம் குடுப்பா, சுகர் இருந்தாலும். அது சைக்கலாஜிக்கலா ரொம்ப நன்னாயிருக்கும்.

பி.ரா: mind over body ன்னு சொல்ற மாதிரி.

ச.கோ: ஆமா. அந்த நேரத்துல அப்படி. மத்தியானம் வந்ததும் க்ங்ச்ண்ய்ண்ற்ங்-ஆ மனசு அந்த அனுபவத்தை நாடறது, எவ்வளவுதான் ஆத்துல பாடினாலும். . . . த்வைதத்துலேயிருந்து அத்வைதம். அந்த நாதத்துல அப்படியே திளைச்சுப் போயிடறோம். அதுதான் நோக்கம் . இல்லைன்னா சங்கீதம் எதுக்கு? தெரிந்தோ தெரியாமலோ அதுதான் நடக்குது. இல்லையா? அந்த காலத்துல ஏதோ சண்டை போட்டாங்களாம் மேடைல. துண்டுக்குள்ள தாளம் போடுவாராம் நைனாப்பிள்ளை. அதுல என்ன ரகசியம் இருக்கு? கலையில ரகசியம் இருக்கணும். கொஞ்சம் மூடினாப்ல குடுத்தாத்தான் கலைன்னு ஒத்துக்கிறேன். அதுக்காக இப்படி மூடிண்டா? அப்புறம் சேலஞ்ச் வேற! ஒரு மிருதங்கக்காரர் இருந்தாராம். யார் வாசிச்சாலும் எல்லாரும் கைதட்டி ரசிப்பாங்களா இல்லையா அவங்களுக்குத் தெரிஞ்சதை? என்னோட வாசிக்க முடியுமா? இதுமாதிரி வருமா உனக்கு? அப்படியே அங்கேயே போவாராம் சட்டையப் பிடிக்காத குறையா. இப்படி ஒருத்தர் இருந்திருக்கார் நம்ம திருவிளையாடல்ல வர்ற மாதிரி. அந்த மாதிரி இருக்கு.
உண்மையாவே நடந்தது ஷியாமா சாஸ்திரி வாழ்க்கயில. பிப்ளிகேசவைய்யா. அவர் கொடி கட்டிக்கிட்டு ஆந்திராவிலிருந்து வந்தார், தஞ்சாவூர்ல யாராவது இருக்காங்களான்னு கேட்டார். எல்லாருக்கும் பயம். ஷியாமா சாஸ்திரியால்தான் முடியும். அவர் ஒரு முனிவர் மாதிரி. ராஜாவையே பார்க்க வரமாட்டார். சௌக்கியமா இருக்காரான்னு ராஜாவை வீட்டிலிருந்தே கேட்டனுப்பிச்சுடுவார். ஷியாமா சாஸ்திரி சங்கீதக்காராளோட ஒரு இதைக் காப்பாத்தனுங்கற துக்காகப் போயிருக்கார். அவர் சிம்மநந்தன பல்லவி பாட அதை இவர் திரும்ப பாடி- சிம்மத்தக் கண்டு பயப்படுவா,அது இப்பத்தைய டைனோசர் மாதிரி. சரபனந்த பல்லவி ஒண்ணு பாடி அவர க்ளோஸ் பண்ணியிருக்கார். அப்படியெல்லாம் இருந்திருக்கார். மஹாவிஸ்வநாத அய்யர் அவர் மாதிரி இன்னொரு சங்கீதக்காரர் பொறக்கலை. பதினோரு வயசுல ”மஹா”ன்னு பட்டம் வாங்கிட்டார். செம்பை வைத்தியநாத பாகதவர் இல்ல!

பி.ரா: கேமியோஸ்-ல படிச்சிருக்கேன். அதில இருக்கு.
சேலஞ்ச்ன்னா அந்த சேலஞ் வேற. கடைசில சீக்கிரமா அவர் இறந்துட்டார். இந்த மாதிரி சவாலுக்குன்னே நம்ம கூப்பிடறாங்களே எல்லாரும்ன்னு, ஒரு சக வித்வான் மாதிரி இருக்க முடியலியேங்கிற வருத்தத்திலே அவர் போய்ட்டார்னு. எங்கிட்ட ரெண்டு வால்யூம் இருக்கறது. அவர் சிஷ்யர்கள் எழுதினது. இதிலேர்ந்து என்ன தெரியதுன்னா சங்கீதம்கிறது அத்வைத பாவத்திற்காக இருக்கே தவிர, தன்னைப் பெரிசா பிரகடனப்படுத்திக்கறதுக்காக நிச்சயமா இல்லை. மொதல்ல இந்த அப்ரோச் மாறணும். Interview கூட ஒருத்தர் கேட்கிறார் ஒருத்தர் பதில் சொல்றார். அத்வைதம் வந்துடறதே. அப்படி இருக்கக்கூடாதேங்கறது என் கவலை.

mus-05

End of Part-1

Posted in Interviews-Conversations | Tagged: , , | Comments Off

இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்/Ilayaraja’s musical confusions

Posted by brammarajan on December 18, 2008

texto_cerillas

இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்*

ராஜலஷ்மி

How to Name it

Long play 33 1/3 R.P.M. Stereo

Echo Records 1986


*இந்த இசைத்தட்டு விமர்சனம் மீட்சி-28 (ஜனவரி-மார்ச் 1988) இதழில் வெளிவந்தது.

அப்பொழுது கேஸட்டுகள் அவ்வளவாய் புழக்கத்தில் இல்லை.

இளையராஜா சமீபகாலத்தில் எல்லோராலும் நிறைய பேசப்படுகிறார். தமிழ் சினிமா இசையில் இதுவரை யாரும் செய்திராத பலவிஷயங்களை அவர் செய்திருக்கிறார். நாட்டுப்பாடல் களிலிருந்தும், மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதத்திலிருந்தும் அவர் கடன் வாங்கி இருந்தாலும், சினிமா இசையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை அவரையே சேரும். கர்நாடக சங்கீதத்தை பாமரர்களுக்கும் எட்டும்படியாக செய்திருப்பதும் மேற்கத்திய இசையைக் கேட்கவேண்டும் என்ற ஆவலை பல இளைஞர்கள் மனதில் விழைத்திருப்பதும் அவருடைய இசையமைப்புதான். சினிமாவுக்கென இல்லாமல் அவர் இசை அமைத்துள்ள சாஹித்யங்கள் How to Name it என்ற இசைத்தட்டாக வெளியிடப்பட்டுள்ளன. அடுத்ததாக Nothing but Wind என்று இன்னொரு இசைத்தட்டு வரப்போகிறதென அறிவித்து ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. இன்னும் வரக் காணவில்லை.

இது 1986இல் வெளிவந்த இளையராஜாவின் How to Name It இசைத்தட்டுக்கு மிகத் தாமதமாக வரும் மதிப்புரை. இந்த இசைத்தட்டில் எந்த அளவுக்கு ஒரு முதிர்ந்த இசையமைப்பாளராக இளையராஜா வெளிப்பட்டிருக்கிறார் என்ற கேள்வியுடன், அவரும் அவருக்கு பின் அட்டைக் குறிப்பு (Sleeve Notes) எழுதியவரும் வைக்கும் மிக உயரமான கற்பிதங்களில் எந்த அளவு வரை அவர் சாதனை செய்திருக்கிறார், என்ற கேள்வியையும் எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம்.

How to Name It இல் உள்ள ஒன்பது சாஹித்யங்களும் (Compositions) சாஸ்திரீய கர்நாடக ராகங்களை சாஸ்திரீய மேற்கத்திய இசை வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. கேட்கும் போது நமக்கு ஏற்படும் முதல் உணர்வு இதை முன்னமே இளையராஜவின் சினிமாப் பாடல்களில் கேட்டிருக்கிறோம் என்பதுதான். அத்தனை ராகங்களிலும் அவர் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பாடல்களாவது இசையமைத்திருக்கிறார். பெரும்பகுதி மிகவும் நிதானமான வேகத்தில் ஒன்றுக்கொன்று அதிக மன நிலை (mood) வேறுபாடின்றி அமைக்கப்பட்டிருப்பதால் ஒரு புதுமையான விஷயத்தைக் கேட்கும் உணர்வு ஏற்படுவதில்லை. இது மிகவும் தன் வயப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம். ஆனால் மேற்கத்திய சாஸ்திரீய இசையைக் கேட்கும் உணர்வு நமக்குக் குறைவாகவே ஏற்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

முதல் சாஹித்யம் How to Name itதான் இந்த இசைத் தட்டில் உள்ளவற்றிலேயே நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ஷண்முகப்ரியா, சிம்மேந்திர மத்யம ராகங்களைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள இந்த இசைத்துண்டு (Piece of Music) எப்படிச் சொல்வது என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்துவதால் வெற்றியடைகிறது.

அடுத்துவரும் (Mad Mod Fugue) இரண்டு வயலின்களுக்கிடையிலான கேள்வி பதில் ஒரு நல்ல முயற்சி. ஆனால் நமக்குள் ஒரு பதிவை ஏற்படுத்துவதற்குள் முடிந்து போய்விடுகிறது இந்த மிகவும் சிறிய துண்டு.

மூன்றாவதான You cannot be Free கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக பின் அட்டைக் குறிப்பு கூறுகிறது ‘துசி தளமுலசே’ என்ற தியாகராஜ கீர்த்தனை மாயாமாளவ கௌள ராகம்; தவறு யாரால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. நமக்குச் சொல்ல முடியாத ஏமாற்றத்தை தருகிறது இந்தத் துண்டு.

Study For Violin மறுபடியும் ஷண்முகப்பிரியாவை மேற்கத்திய பாணியில் தருகிறது. மற்றபடி இசையின் ஓட்டத்தில் எந்தப் புதுமையும் இல்லை.

It is Fixed பியானோவில் பந்துவராளியுடன் தொடங்குகிறது. ஆரம்பத்தில் ஏற்படும் நம்பிக்கை, பின்பகுதியில் drums ஐச் சேர்ப்பதால் குறைந்து போய் ஒரு தீவிரமற்ற மனோநிலைக்குத் தள்ளி விடுகிறது.

Chamber Welcomes Thiagaraja முழுக்க முழுக்க கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பின் அட்டையில் மற்றவற்றிற்கு எழுதியது போல இதன் ராகம் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்டுள்ள உள் ஊடுருவும் பக்தி உணர்வோ நமக்கு ஏற்படுவதில்லை.

I met Bach in My House “ஒரு வைரத்தின் இதயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது”, என்று குறிப்பு கூறுகிறது. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு ஆண் குரல்களுக்கு எந்தவொரு அதிக பட்ச வேலையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார் இளையராஜா. அதற்கு அடுத்ததான … and we had a talk ம் ஒரு இந்திப் பாடலை நினைவு படுத்துவதுடன் நின்று போய் விடுகிறது. Do Anything திடீரென்று நடுவில் ஒரு ஷெனாய் புகுந்து அதுவரை நமக்கு ஏற்படுகிற மனப்பதிவுகளையும் ஒன்றுமில்லாமல் அடித்துவிடுகிறது. அந்த சாஹித்யத்தில் ஒரு பேரமைதி சூழ்ந்து உன்னதத்தின் ஒளி வீசுவதாக அட்டையில் கூறுகிறார்கள். இந்த சாஹித்யங்களுக்கான தலைப்புகள் பெரும்பாலும் பொருந்தாமல் போய்விட்டதாகத் தான் படுகிறது. இத்தலைப்புகளும் குறிப்புகளும் இல்லாமல் இருந்திருந்தால் இசை ஏற்படுத்தும் உணர்வுகளாவது கேட்பவனுக்கு மிச்சம் ஆகியிருக்கும்.

இளையராஜா Frontline குக் கொடுத்த பேட்டியில் இருந்து சில இடங்களை நினைவு கூற வேண்டிய அவசியம் இப்போது ஏற்படுகிறது. மியூசிக் அகாதமி வித்வான்கள் தியாகராஜரின் பதினைந்து கீர்த்தனைகளை மனப்பாடம் செய்துவிட்டு அதையே திரும்பத் திரும்பப் பாடுகிறார்கள் என்றும், அவர்களின் குரல்களில் ரீங்கரிக்கும் அகங்காரத்தைத் தான் கேட்டிருப்பதாகவும் இளையராஜா கூறுகிறார். ஏன் நீங்கள் அதிகம் பேட்டிகள் தருவதில்லை என்ற கேள்விக்கு, விமர்சகர்கள் எல்லோரும் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததான நினைப்புடன் பேசுபவர்கள். அவர்களுடைய கருத்துக்களை என் வாயால் வரவழைக்கப் பிரயத்தனப்படுபவர்கள், அவர்களுக்கு நான் ஏன் அந்த வாய்ப்பைத் தர வேண்டும் என்று கேட்கிறார். ஓரளவுக்கு அவருடைய கருத்து சரி. எல்லாம் தெரிந்து யாரும் இருக்க முடியாது. ஆனால் கேட்பவனின் இசை உள்ளுணர்வை (Listener’s Sensitivity to Music) மறுப்பது எந்த வகையில் நியாயம்?

“இசையில் Value Judgements க்கு இடம் இல்லை. ஒரு இசை வடிவம் இன்னொன்றை விட உயர்ந்தது என்பது போலான கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமையில்லை,” என்கிறார். கர்நாடக சங்கீதம், லைட்மியூசிக்கைவிட உயர்ந்தது என்று கூறும் பலருக்கு, லைட் மியூசிக்கே தெரியாது என்கிறார். அது இவருக்கு எப்படித் தெரியும்? மேலும் இசை என்பது வெறுமனே ஸ்வரங்களை மாற்றி மாற்றிப் போடும் ஏமாற்று வேலை தான், என்று கூறுவதெல்லாம் Value Judgement இல்லாமல் வேறு என்னவாம்?

மிகவும் சுயமான இசை அமைப்பாளர் என்று கருதிக் கொள்ளும் இளையராஜா (வித்வான்கள் பாடியதையே பாடுபவர்கள்!) நிறைய மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதகர்த்தாக்களின் இசையைக் காப்பி அடிக்கிறார். Dvorak என்ற ஸெக் Composer ன் Symphony No. 9 in E minor ஐக் கேட்டால் ‘சிட்டுக் குருவி… … வெட்கப்படுது’ என்ற பாடல் எவ்வளவு அப்பட்டமான காப்பி என்று தெரிவரும். ஒரு சாஹித்யத்தை எடுத்து விளக்கம் தருதல் வேறு. அப்படியே காப்பி அடிப்பது வேறு. தான் இன்னதை எடுத்தாண்டிருப்பதாக எங்கும் ஒப்புதல் கூட செய்வது இல்லை. இது நமக்குத் தெரியாத வரையில் மட்டுமே அவர் இசை அமைப்பை வியக்க முடியும்.

நாயின் குரைப்பிலும், கதவோசையிலும் இசையைப் பார்க்க முடியும் என்கிறார். இது போன்ற ஒரு பார்வை வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால் நமக்குப் புதிது ஒன்றும் இல்லை. தி. ஜானகிராமன் பல வருடங்கள் முன்பே ‘மோக முள்’ளில் எழுதியதுதான். அடுத்த வரியிலேயே ஊளையிடும் நாய்களுக்கும், வித்துவான்களுக்கும் வித்யாசமில்லை என்று அவர் கூறும் போது அவருடைய நோக்கங்களின் உன்னதம் பற்றிய கேள்வி எழுகிறது.

“நான் ஒரு சங்கீதக்காரனில்லை. ஒரு வித்வானுக்கு அவனுடைய ராகம் ஒரு தடை; தாளம் ஒரு தடை; அவனுடைய இசைப் பயிற்சி ஒரு தடை; இசை பற்றிய அவனுடைய கருத்துக்களே ஒரு தடை. நான் சங்கீதக்காரனில்லாததால் என்னைக்குறுக்கக் கூடிய எல்லைகள் எதுவும் இல்லை. என் மனதுக்குத் தோன்றுவதைச் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை; உதாரணத்திற்கு நான் ஆரோகணத்தில் மட்டுமே ஒரு பாடலை இசை அமைத்திருக்கிறேன். ஆனால் சங்கீத வித்வான்கள் எல்லோரும் ஒரு கீர்த்தனை என்பது ஆரோகணத்தையும் அவரோகணத்தையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று நம்பி வந்திருக்கிறார்கள்,” என்று பேட்டியில் கூறுகிறார். (அடிக்கோடு என்னுடையது).

ஆரோகணம்: ஸரிகமபதநிஸ் ராகம்: கல்யாணி

அவரோகணம் : ஸ்நிதபமகரிஸ தாளம்: ஆதி

மா பா தா, நி ஸ் ô ; ; ; / நீ ஸ் ô ஸ் ô, ஸ் ô நி ஸ் ô ரீ ; //

க லை வா ணி யே / உ னைத் தா னே அழைத் தேன் //

மா பா பா,பா,பா,மா பாதா / ஸாரீகா, ம மாபாதா, நி //

உ யிர்த் தீ யை வ ளர்த்தேன் / வ ர வேண்டும் வரம் வேண்டும் //

இதில் கமகங்கள் காட்டப்படவில்லை. ஒரு தோராயமான ஸ்வரபடுத்துதல் தான் இது. இளையராஜா மிகவும் பெருமையாக தான் ஆரோகணத்தில் மட்டுமே அமைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் பாடல்.

முதல் விஷயம்-வித்வான்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை.

ஆரோகணத்தில் மட்டுமே பாடுவதானால் பாடல் பின்வருமாறு செல்ல வேண்டும்.

. . . . . .  .. .. .. .. .. .. ..

ஸ ரி க ம ப த நி ஸரிகம பதநி ஸ் ரி க ம ப த நி ஸ ரி க ப த நி ஸ

. . . . . . .

அது சாத்தியமில்லை என்பது எல்லோரும் அறிந்ததே. ஒரு வார்த்தை முடிந்து அடுத்த வார்த்தை தொடங்கும்போது ஆரம்பத்தில் உள்ள ஸ்வரம் முதல் வார்த்தையின் முடிவிலுள்ள ஸ்வரத்துக்கு சற்றே கீழே உள்ள ஸ்வரமாகவோ அல்லது நான்கைந்து ஸ்வரங்கள் கீழாகவோ இருக்கிறது. அதனால் ‘ஸ்’ லிருந்து ‘நி’ யைத் தொட்டுத்தான் அல்லது ‘ப’ விலிருத்து ‘ம’ வைத்தொட்டுத்தான் சங்கதிகள் செல்கின்றன. இந்த இடங்களைப் பாடலிலும் அவரோகணத்திலும் அம்புக்குறியிட்டு காட்டியிருக்கிறேன். இரண்டாவது-இந்தப் பாடலில் இது சுலபமானதற்குக் காரணம் ஆரோகணமும் அவரோகணமும் அதே ஸ்வரங்களை உள்ளடக்கியவை. ஆரோகணத்தில் வேறு ஸ்வரங்களையும் அவரோகணத்தில் வேறு ஸ்வரங்களையும் ஒரு ராகம் கொண்டிருக்கும்போது இந்த மாதிரியான பரிசோதனை(!)கள் சாத்தியமில்லை. ஒரு பரிசோதனை என்பது நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து செல்லாததால் இது பரிசோதனையே இல்லை. எல்லா வித்வான்களும் கல்பனாஸ்வரம் பாடும்போது இது போன்ற ஸ்வர அமைப்புகளைக் காலம் காலமாக உபயோகித்து வந்திருக்கிறார்கள். எந்த வித்வான்களை இவர் காரணமில்லாமல் கரிக்கிறாரோ, அவர்களிடமிருந்து ஒரு விஷயத்தை வாங்கி, தானாகவே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு ஆரோகணத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு ‘எல்லை கடந்த’ (அவருடைய வார்த்தைதான்) பரிசோதனை செய்துவிட்டார் இளையராஜா.

இசை கேட்கும் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் அவரவர்களுக்கான எல்லைகள் இருக்கின்றன. தன்னை எல்லை கடந்தவனாக நினைத்துக் கொள்வது ஒரு சரியான நினைப்பாக முடியாது. சினிமாவுக்கு இசையமைப்பதில் இருக்கின்ற பல எல்லைகள் ஒரு வித்வானுக்குக் கிடையாது. வித்வான்களில் குரல்களில் (ஒரு சிலருடையதைத் தவிர) இளையராஜா அளவுக்கு அகங்காரம் தொனிக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

ஒரு நோக்கில் இளையராஜாவின் முயற்சிகளுக்கான மரியாதையையும், உரிய இடத்தையும் அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இது போன்ற முயற்சியிலேயே இதுதான் வெற்றிகரமான முதல் முயற்சி என்று கூறிக்கொள்வது அதிகபட்சம். இளையராஜாவுக்கு முன்பே யஹுதி மெனுஹினின் ‘அர்ஜுன்’ என்ற ஸாஹித்யம் (Composition) மேற்கத்திய ஸாஸ்திரீய இசையிலிருந்து இழை பிறழாமல் நம் ராகங்களை வெளிப்படுத்தி இருக்கிறது. பண்டிட் ரவி ஷங்கரின் முதல் Concerto வை Andreprevin Conduct செய்ததும், இரண்டாவது Concertoவை Zubin Mehta Conduct செய்ததும் L.ஷங்கரும் Maclaughlinம் செய்துள்ள Jazz முயற்சிகளும் கண்டிப்பாக நாம் இங்கு குறிப்பிட வேண்டியவை. என்ன உணர்வை அவை ஏற்படுத்துகின்றன என்று அட்டைக் குறிப்புகள் வரையறுப்பதில்லை.

ஒரு அற்புதமான விஷயத்தைச் சொல்லி அதைச் சாதாரண உதாரணங்களால் விளக்குவது, ஒரு சுயமான வீச்சை அடுத்து ஒரு தவிர்க்க முடியாத கீழிறங்கல் (Bathos) இதுதான் இளையராஜாவின் இசையமைப்பின் சாராம்சம். சுயமான வீச்சு அங்கங்கு தென்படுவதை மறுக்க முடியாததால்தான் இம்மதிப்புரை.

குறிப்புகள்:

1. இதில் எடுத்துக் காட்டியுள்ள இளையராஜாவின் கூற்றுகள் Frontline Aug 22-Sept 4, 1987 இதழில் வெளிவந்த பேட்டியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டவை.

2. Concerto for Sitar and Orchestra-Ravi Shankar

Andre Previn

London Symphony Orchestra

Long play 33 1/3 RPM Stereo

EMI 1971 ASD 2752

3. Ragamala (Garland of Ragas)

Sitar Concerto No.2-Ravi Shankar

Zubin Mehta

London Philormonic Orchestra

Long play 33 1/3 RPM Stereo

EMI 1982 ASD 4314.

oido

Posted in (Re)views on Music | Tagged: | Comments Off

ஜாஸ் இசை-சில குறிப்புகள்/ Jottings on Jazz for the Tamil audience/Brammarajan

Posted by brammarajan on December 17, 2008

ஜாஸ் இசை-சில குறிப்புகள்

பிரம்மராஜன்


piano-gatoமுதல் உலகப்போருக்கு முந்தைய வருடங்களில் நடந்த இசைத்துறையின் வளர்ச்சியில் ஒருவித அவசரமும் மாறுதல் குறித்த பதற்றமும் காணப்பட்டது.  காலமே முடிந்துவிடப் போகிறது என்பது போன்ற பிரக்ஞையுடன் சாகித்தியகர்த்தாக்கள் செயல்பட்டனர்.  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கலைத்துறைகள் அனைத்துமே தொழில் துறையின் கண்டுபிடிப்புகளால் பாதிக்கப்பட்டன.  டி.வி,  கம்ப்யூட்டர்கள், ஜெட் விமானங்கள்  DDT  பூச்சிகொல்லி, ஜெராக்ஸ் என தினசரி வாழ்வின் ஒவ்வொரு பக்கமும் தொழில் நுட்பத்தினால் மாற்றமடைந்து கொண்டிருந்தது.  எல்லா வற்றுக்கும் மேலாக இசை வடிவத்தின் பொதுவான களத்தில் புதிய உருவாக்கல்கள் நடந்து கொண்டிருந்தன.  ஒரு ட்யூனின்  ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கான அர்த்தமுள்ள நகர்வு, முதல்கள்-மத்தியங்கள்-முடிவுகள் ஆகியவை கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. ஒரு ஒலி மற்றொன்றைத் தொடரும் விதம், மற்றொன்று பிறவற்றிற்கு முன்பாக இடம்பெறும் விதம் போன்றவை எந்த காரண ரீதியான அடிப்படையிலும் இயங்கவில்லை என்ற வாதங்களை, இசைக் கேட்பாடுகளை உருவாக்கிய இந்நாள் இசைக்கலைஞர்கள் கேட்கத் தொடங்கினர்.  ஒரு இசை ஏன் இசையாக இருப்பதற்குப் பதிலாக மௌனமாக இருக்கக் கூடாது என்ற கேட்டார்  John Cage என்ற அமெரிக்க சாகித்யகர்த்தா.

வினோதமான படைப்புகளில் ஈடுபடுவதை விட்டு விட்டு ஒரு இசைக்கலைஞன் ஏன் சாதாரணமான ஒரு ட்யூனை – எல்லோரும் ரசிக்கக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய – எழுதக் கூடாது? இந்தக் கேள்விக்குப் பின்னால் கலைக்கும் தப்பித்தலுக்கும் இடையில் உள்ள குழப்பம் தெளிவாக்கப்படாது நிலவியது. யதார்த்தங்களில் ஈர்ப்பற்ற உறுத்தலான தன்மையிலிருந்து தப்பிக்காது அவற்றின் மீதான அவசியமான விமர்சனமாகவே இசை இருக்கவேண்டும் என கலைஞர்கள் விரும்பினர். சரி, வாழ்க்கை அவ்வளவு உவப்பில்லாமல் இருந்தால், யாருக்கு வேண்டும். அதே உவப்பில்லாத வாழ்வை பிரதிபலிக்கும் இசை. இந்தக் கேள்விக்கு இரண்டுவிதமான பதில்கள் உண்டு.

1. மனிதப் பிரக்ஞையின் ஆழமானதும், அத்தியாவசியமானதுமான தேவைகளை இசை பூர்த்தி செய்கிறது என்ற அடிப்படை உண்மை – மனிதன் கலையை உருவாக்கவும் அதை நுகரவும் வேண்டும்; விளையாடவும் காதல் செய்ய விரும்புவதும்போல.

2. கலை எந்தவித சிக்கலான காலகட்டத்திலும் வியக்கத்தகுந்த அளவுக்கு தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. கலை ரீதியான ஒவ்வொரு புரட்சிக்குப் பிறகும் எதிர்பார்க்கமுடியாத கலாநிகழ்முறைகளும் அசிங்கத்திலிருந்து புறப்படும் அழகுகளும் தோன்றுகின்றன. ஒரு சைக்கிள் சீட்டையும், ஹாண்டில்பாரையும், வைத்து பிக்காஸோ உருவாக்கிய ‘சிற்பம்’ நமக்கு ஞாபகம் வரும்.

20 ஆம் நூற்றாண்டு இசையின் மிக முக்கியமான புரட்சி என்பது உருவ சிதைப்புக்கும் (distortion) அப்பாற்பட்டு  உருவான புதிய இசை மொழி, எலக்ட்ரானிக் இசை சகாப்தத்தை தொடங்கிய Stockhausen (ஜெர்மனி) John cageம்  தொழில் நுணுக்க ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ரொமான்டிசிசம் பயன்பட்டு தீர்ந்துவிட்டது என்பதை உலகுக்கு தமது புதிய சாகித்தியங்கள் மூலம் அறிவித்தனர். மேலும் ‘யதேச்சை இசை’ Random music என்ற ஒரு தீவிர எல்லையில் ஜென்புத்த தத்துவத்தை இணைத்து சம்பிரதாய விமர்சகர்களை சவாலுக்கு இழுத்தவர்  Johncage. இசை ‘யதேச்சை இசை’ என்பது ஏறத்தாள நவீன ஓவியம் போன்றது. அதன் படைப்பாளனே மீண்டும் அந்த இசையை நடத்தும்போது, அது மாறி ஒலிக்கவேண்டும். இந்த randomness மிக அதிக அளவில் ஜாஸ் இசையில் இருக்கிறது. 1910களில் பாப்புலர் இசையாக தொடங்கியது ஜாஸ். ஜாஸின் மறுபெயர் எல்லையற்ற சுதந்திரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதனுடன்  இணையும் எதனையும் தனது அங்கமாக மாற்றிக்கொண்டுவிடும். குறிப்பாக கறுப்பு இசைக்கலைஞர்களிடையே வளர்ந்து பிரபலமாகிய ஒரு இசை நிகழ்த்து முறையிலிருந்து ஆரம்பம் கண்டது. ஜாஸின் லயம்  (rhytham) Ragtime என்ற பியானோ இசையிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. Scot Joplin என்ற இசைக்கலைஞரால் பிரபலமாக்கப்பட்டது ragtime. இதற்கு ஜாஸ் கொடுத்த முக்கிய பங்களிப்பு swingம் improvisation. ஜாஸ் குழுவின் தனி இசைக்கலைஞர் soloist ஒரு பாடலை அவருக்கு எழுதி தரப்பட்ட மாதிரி வாசிப்பதில்லை. பாடலைச் சுற்றி அந்தக் கணத்தில் தோன்றும் கற்பனைகளை வைத்து improvise செய்து, பாடலின் பிரதான ஸ்வரங்களை பளிச்சிடச் செய்து, அதே சமயம் தனது சேர்ப்புக்களையும் பாடலுடன் இணைத்து விடுகிறார் அவர். அவருக்குத் தரப்பட்ட இசைக்குறிப்பின் மாறுபாடுகளை (Variations) சுய எழுச்சியுடன் அவர் வாசிக்கிறார்.

ஜாஸில் பியானோ, ஆர்கன், Vibraphone,  guitar மற்றும் கீழ் ஸ்தாயி நரம்பிசை கருவிகள் (string bass)  ஒரு பாடலின் அடிப்படை harmonyயை பின்னணியில் வாசிக்கின்றன. ஜாஸ் பிரத்தியேகமான நிகழ்த்துமுறையென்று முன்பே குறிப்பிட்டோம். இந்த நிகழ்த்து முறை பிரதானமாய் வாத்தியக் கருவிகளுக்கானது. இரண்டாம் பட்சமாய்த்தான் குரல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆயினும் வியப்பாய் இருப்பது என்னவெனில் ஜாஸின் அடிப்படை இசைபொருள், குரலிசையிலிருந்து ஸ்சுவீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். ஜாஸ் கலைஞர்கள் தங்கள் அடிப்படை பொருட்களை கறுப்பு மற்றும் வெள்ளையர்களால் பாடப்பட்ட இசை ஆதாரங்களிலிருந்து எடுத்தாள்கின்றனர். இதில் இரு பிரதான தோற்றுவாய்கள் Popular song மற்றும் Blues. Blues என்பது தனிவகையான கறுப்பு நாடோடிப் பாடல். இந்த Blues தனிமையை, கைவிடப்படுதலை, இன்னல்களை, சோகங்களை வெளிப்படுத்திய இசை மனதைக் கரைக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஜாஸ் இசைத்தட்டுக்கள் blues ஐ வைத்து உருவாக்கம் கண்டவைதான். கறுப்பர்களின் புலம்பல் பாடல்களில் இருந்த தனித்துவமான பண்ணமைப்பினை சாஸ்திரீய ஜாஸ் ஸ்வீகரித்திருக்கிறது.

மேற்கின் சாஸ்திரீய இசையின் Mozart அல்லது Bramhsஇன்  இசைப்பொருள் (theme)மெலிதாகக் கோடி காட்டப்பட்டு, பின்னர் அதன் முன்னேறும் பகுதிகளால் Movements  மாறுபடுத்தப்படுகிறது. இதற்கு எதிர்மாறானது ஜாஸ்.

இதற்கு மாறாக ஒரே பாடலைத் தனித்தனி இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்கள், தனித்தனியாக வேறுபடுத்தியும் எல்லோரும் இணைந்து பிறகு வேறுபடுத்தியும் இசைப்பார்கள். உச்சமான கோரஸ் பகுதி பாடலின் Polyphony எனும் பலதள இசையை பாதுகாத்து தருகிறது. ட்ரம்பெட் சந்தோஷமான பிளிறலைப்போல தொடங்குகிறது. மேலும் கீழுமாய் பாடலின் துரிதமான இசைப்பகுதிகளைப் பாடுகிறது கிளாரினெட். ட்ராம்போன் மற்ற இசைக்கருவிகளைக் கோர்த்து ஒருவித அணிவகுப்பு போன்ற துணை ஸ்ருதிகளைத் தருகிறது. இவை யாவற்றையும் ஒரு மந்திரம்போல அடிப்படை இசைக்கோர்வையுடன் இணைகிறது-பியானோ, ட்ரம்ஸ், பான்ஜோ மற்றும் கிட்டார்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை ஜாஸ் Swing  என்றும் Boogie என்றும் Bebop என்றும் Modern Jazz என்றும் பலவிதமாக விரிவடைந்திருக்கிறது. பல சமயம் குழப்பமூட்டும் வகையில். பாப்புலராக களிப்பூட்டும் நிகழ்ச்சியாக தொடங்கிய ஜாஸ் இன்று மிகக் கூர்ந்து கேட்டு ரசிக்கும் தனிக்குழுக்களுக்காக என்று ஆகிவிட்டிருக்கிறது. இன்று ஜாஸ் கேட்பது ஒரு intellectual exercise என்று ஒரு இசை விமர்சகர் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவகையில் சொல்வதானால் ஜாஸ் சாஸ்திரீய இசையின் நிலையை எட்டிவிட்டது.

div021

P.S.

I wrote these jottings in MEETCHI-35(1991). Today I might want to write in detail especially where the notes are a bit stubby. In fact I would want to write a separate essay on the experimentation of John Cage. I felt very much impressed after reading Coming Through Slaughter-Michael Ondaatje’s disturbing novel based on the real life of the jazz pioneer Buddy Bolden. It focusses on the last months of his sanity. Ofcourse there are no extant recordings of  Buddy Bolden to listen to. When I enter this area of music I am distracted. Should I also improvise?

38

Posted in (Re)views on Music | Tagged: | Comments Off

Lalgudi Jayaraman’s 75th Violin

Posted by brammarajan on December 4, 2008

Enhanced with Snapshots

lalgudi75thviolin

லால்குடி ஜெயராமனின் 75வது வயலின்

பிரம்மராஜன்

லால்குடி ஜி.ஜெயராமன் அவர்களை நேரில் பார்த்து நிதானமாக சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு 1998ஆம் ஆண்டு ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது வாய்த்தது. அவரிடம் ஒரு ஆட்டோகிராஃப் கூட வாங்கினேன். அச்சமயத்தில் அவருடைய இசையை நான் கேட்டதுண்டு என்று சொன்ன போது அவை சம்பிரதாய வார்த்தைகள் என்றோ முகமன் என்றோ அவர் நினைத்திருக்க வாய்ப்புண்டு. தீவிர இலக்கியக்காரர்களுக்கும் இசைக்கும் என்ன சம்மந்தம் இருக்கக் கூடும் என்றும் நினைத்திருக்கலாம். இசை, ஓவியம், இலக்கியம் ஆகிய கலைத்துறைகள் கொடுக்கல் வாங்கல் இன்றி தனித்தனியாக நிற்பது தமிழ்நாட்டில்தான். நான் லால்குடியின் இசையைக் கேட்கத் தொடங்கிய வருடம் 1982 என்று நினைக்கிறேன். பெரும்பாலும் சென்னையிலிருந்து விலகி தூரத்தில் குறுநகரத்தில் வசிப்பதால் நேரடிக் கச்சேரி கேட்கும் வாய்ப்பு எனக்குக் குறைவு. தொடக்கத்தில் எல்.பி. ரெக்கார்டுகள் மூலமாகவும் பிறகு கேஸட் டேப்புகள் வழியாகவும் இப்போது சிடிக்கள் வழியாகவும் அவருடைய சங்கீதத்தைக் கேட்கிறேன்.
மேற்கத்திய இசைக்கருவியான வயலினை கர்நாடக சங்கீதத்திற்கு தகுந்தவாறு வாசிக்கும் முறையை மாற்றியமைத்து ஏறத்தாழ நம்மூர்க்கருவியைப் போல நாம் புழங்கி வருகிறோம். ஒரு கச்சேரியின் பிரதான பாடகருக்கான பக்கவாத்தியமாக (அ) துணை இசைக்கருவியாக இருந்த வயலின் 60களுக்குப் பிறகு கச்சேரியின் பிரதான வாத்தியமாக மாறியது. அப்படி மாற்றியவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் லால்குடி ஜெயராமன். இவருக்கு சமமாக வயலின் இசையில் சாதனை படைத்தவர்கள் என்று சொல்லக்கூடிய இன்னும் இருவர் எம். எஸ்.கோபாலாகிருஷ்ணன் மற்றும் டி.என்.கிருஷ்ணன்.
லால்குடி பல மூத்த குரலிசைக் கலைஞர்களுக்கும் (அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்பிரமணிய அய்யர், ஜி.என்.பாலசுப்பிரமணியன், மதுரை மணி அய்யர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, எம்.டி.ராமநாதன், மதுரை சோமு, ராம்நாட் கிருஷ்ணன்) புல்லாங்குழல் இசைக்கலைஞர்களுக்கும் (டி.ஆர்.மஹாலிங்கம், என்.ரமணி) வீணை இசைக்கலைஞர்களுக்கும் (ஏமனி சங்கர சாஸ்த்ரி, மைசூர் தொரைசாமி ஐயங்கார், எஸ.பாலச்சந்தர்) பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார். ஆனால் பெண் குரலிசைக் கலைஞர்களுக்கு அவர் வாசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. பாடும் பெண் குரலின் ஸ்தாயிக்கேற்ப வயலின் ஸ்ருதி சேர்க்கப்படும்போது வயலினுக்கே உரிய இனிமைச் செழுமையை இழந்துவிடுவதாக ஜெயராமன் கருதியது இதற்கான காரணமாக இருக்க முடியும்.

சாகித்யம் கர்னாடாக இசையில் மையப்பங்கு வகிப்பதாலும் மேலதிகமாக கச்சேரியே இசைப்பிரதியைச் சார்ந்திருப்பதாலும் ஒரு குரலிசைக் கலைஞர் குறிப்பிட்ட ராகத்திற்கான பாடல்(அ) கீர்த்தனையை முழுமையாகக் கற்ற பிறகே அதைப் பாடுகிறார். ஆனால் கருவியிசைக்காரர்கள் இப்படி ஒரு கீர்த்தனையைக் கற்காது காதில் விழுந்த ஸ்வரங்களை வைத்து இசையை நிகழ்த்துகின்றனர். ஆனால் லால்குடி ஜெயராமன் அப்படிப்பட்டவரல்லர். அவர் வாசிக்கும் எல்லா இசைப்பிரதிகளையும் குரலில் அவரால் பாட முடிந்த பிறகே அவர் அதை வாத்தியத்தில் வாசிக்கிறார். தொடக்கத்தில் பாடகராக கச்சேரிகள் செய்திருக்கிறார். வார்த்தைகளை அவருடைய வயலின் ஸ்பஷ்டமாக உச்சரிக்கும் திறன் மிக்கது. எடுத்துக்காட்டாக “தீராத விளையாட்டுப் பிள்ளை” என்ற ராகமாலிகையின் இரண்டாவது வரி மீண்டும் வாசிக்கப்படும் சமயம் இதை அவதானிக்கலாம். குரலிசையின் பாணியைப் பின்பற்றி கருவி இசையில் வாசிப்பதை ஹிந்துஸ்தானியில் “காயகி” என்கிறார்கள். அது போன்ற ஒரு சொல்லாக்கம் கர்னாடக இசையில் புழக்கத்தில் இல்லை. எனினும் ஜெயராமனின் வாசிப்பு பாணியில் பாதிக் குரல் அம்சமும் பாதி வாத்திய அம்சமும் இருப்பதாக இசை விமர்சகர் டாக்டர் என். ராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயராமன் என்ற வயலின் இசைக் கலைஞர் ஒரு இசைப்படைப்பாளராகவும் பரிண மித்திருக்கிறார். குறிப்பிடத்தக்க “தில்லானாக்கள்” மற்றும் “வர்ணங்கள்” போன்ற இசை உருக்களை எழுதியிருக்கிறார். கால நெருக்கடியுள்ள, அலுவல் மிகுந்த வாழ்க்கையில் இசை உருப்படிகளை எழுதுவதற்கு அவர் எப்படி நேரம் ஒதுக்கிக் கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வர்ணங்கள் கச்சேரியின் தொடக்கத்திலும் தில்லானாக்கள் இறுதியிலும் பாடப்படுகின்றன. 29 தில்லானாக்களையும், 13 ‘தான வர்ணங்களையும்’ 3 ‘பத வர்ணங்களையும்’ எழுதியிருக்கிறார். வசந்தா ராகத்தில் ஜெயராமன் எழுதிய முதல் “தில்லானா” ஜி.என்.பியின் முழு ஆமோதிப்பைப் பெற்றது. அவர் ஒரு சிறந்த குருவும் கூட. அவரது சகோதரி ஸ்ரீமதிக்கும் மகன் கிருஷ்ணனுக்கும் மகள் விஜிக்கும் வயலின் கற்றுக் கொடுத்திருக்கிறார். பல இசைப்பள்ளிகளுக்கு ஆலோசனைகள் அளிக்கிறார்.

லால்குடி ஜெயராமனின் வயலின் கச்சேரியை “ஸோலோ” இசைக்கச்சேரி என்று வரையறுக்க முடியாதென்பவர்கள் உண்டு. தொடக்கத்தில் ஜெயராமன் தன் சகோதரி ஸ்ரீமதியுடன் சேர்ந்து வாசித்தார். அவரது இக்கட்டத்திய இசை கூடுதலாக எனக்கு நிறைவளிப்பதாக இருந்தது. (ராம கதா என்று தொடங்கும் மத்யமாவதி, நாதலோலுடை (கல்யாண வசந்தம்), திலங் தில்லானா), பிறகு அவர் மகன் ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் மகள் விஜயலஷ்மி ஆகியோருடன் வாசித்தார். பிறகு அவர் தன் புதல்வர் ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணனைச் சேர்த்துக் கொண்டு பல கச்சேரிகளில் வாசித்திருக்கிறார். மேக்னா சவுண்ட் 1994இல் வெளியிட்ட ஒரு சிடி கேட்ட போது அவர் தன் புதல்வரை அனுசரித்து மொத்தமான இசையனுபவத்தில் அவரது பங்கின் அழுத்தத்தை குறைத்து விட்டாரோ என்ற மனப்பதிவு ஏற்பட்டது.

தீவிர இசை ரசிகரல்லாதோரும் அணுகும் விதமாக The Dance of Sound என்ற பெயரில் 1978ஆம் ஆண்டு ஒரு இசைத்தட்டு வெளிவந்தது. அவர் சொந்தமாய் எழுதிய தில்லானாக்களை The Dance of Sound என்ற பெயரில் ஒரு இசைக்குழுவுடன் (ஆர்க்கெஸ்ட்ரா) இணைந்து வாசித்தார். “தில்லானா” என்கிற இசை வடிவம் ஒரு நாட்டிய அரங்கேற்றத்தின் போது பாடப்படும் இன்றியமையாத இசை. கச்சேரியைப் பொருத்தவரை அது “லேசான” அயிட்டமாகக் கருதப்பட்டு கடைசியில் பாடப்படும். ஆனால் அவற்றைப் பிரதானப்படுத்தியது 8 தில்லானாக்கள் கொண்ட ஜெயராமனின் இந்த இசைத்தட்டு. இன்றைக்குக் கேட்டாலும் மனதில் மாயங்களை நிகழ்த்ததும் திறன் கொண்டவை. இந்த எட்டில் எனக்குப் பிரியமானவை மோகன கல்யாணி, தேஷ், துவிஜாவந்தி மற்றும் பஹாடி. இத்தில்லானாக்களின் கடினமான தாளப்பிரயோகம் மற்றும் ஸ்வரங்களைக் கையாளும் முறை தேர்ச்சி மிக்கவை. ஆரம்பகாலப் பயிற்சியாளனுக்கு இவை சிரமம் தரக்கூடியவை. என்றாலும் ஒரு கூர்ந்த ரசிகனுக்கு கலைஞானத்தின் வேறு அனுபவச் சாளரங்களைத் திறந்து விடக்கூடியவை. “ஆக்கெஸ்ட்ராவை” அவர் தன் துணைக்குச் சேர்த்துக் கொண்டது பற்றி அப்போது சில முணுமுணுத்த விமர்சனங்கள் இருந்தன-தீவிர இசையை அவர் நீர்த்துப் போக அனுமதித்து விட்டதாக. ஆனால் ஜெயராமனின் “தில்லானாக்களை” கேட்ட அனுபவத்தின் விளைவாய் கர்நாடக இசை ரசிகர்களாக மாறியவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கக் கூடும். இது தவிர 1970இல் வெளிவந்த ஒரு எல்.பியில் அவரே எழுதிய “திலங்” தில்லானா இடம் பெற்றது.

1983 இல் வெளிவந்த South Meets North (An enchanting hour with Lalgudi G.Jayaraman &Ustad Amjad Ali Khan) என்ற இசைத்தட்டின் வழியாக உஸ்தாத் அம்ஜத் அலிகானுடன் சேர்ந்து கர்னாடக இசையின் வயலினையும் ஹிந்துஸ்தானி இசையின் சரோடையும் கேட்க வழிவகுத்தார் லால்குடி. 1மணிநேரத்திற்கான அந்த இசைத்தட்டில் மால்கோன்ஸ்-ஹிந்தோளமும் பூபாலி-மோஹனமும் இடம் பெற்றுள்ளன. வேலூர் ராமபத்ரன் மிருதங்கமும் ஷாபட் அகமத் கான் தப்லாவும் வாசித்திருக்கின்றனர். ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தில் இந்த இரு ராகங்களும் இரவு நேரத்திற்குரியவை. “ஜூகல்பந்தி” என்றழைக்கப்படும் இந்த “இசை சந்திப்பில்” இரண்டு கலைஞர்களும் ஒரு ராகத்தில் தளம் அமைத்துக் கொண்டு தத்தமது பாணியில் தனிப்பட்ட திசையில் பயணப்பட்டு இறுதியில் ஒன்றிணைகிறார்கள். வடக்கும் தெற்கும் இதில் இணைகின்றன ஆனால் பிணைவதில்லை. மூல அர்த்தப்படி “ஒரு ஜோடியைப் பிணைப்பது”தான் ஜூகல்பந்தி. ஒரே குருவிடம் இசை பயின்ற இரண்டு குரலிசைக் கலைஞர்களும் கூட ஜூகல்பந்தி பாணியில் பாடலாம்.

ஒரு எல்.பியின் 20 நிமிடப் பக்கத்தில் பல சிறிய துக்கடாக்களைக் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் விரிவான ஆலாபனைகளும் ஸ்வரப்பிரஸ்தாரங்களும் கொண்ட இந்த இசைத்தட்டு, கேட்பவனின் நிறைவை நீட்டிக்கக் கூடியதாய் அமைந்தது. ஹெச்.எம்.வி கம்பெனி இந்த இசைத்தட்டின் ஒரு பக்கத்தை வழக்கமான 20 நிமிடத்திற்கு மாறாக 30 நிமிடத்திற்கு பதிவு செய்திருந்தது. அன்றைக்கு அது பெரிய விஷயம். ஹிந்துஸ்தானி இசை குறித்து ஜெயராமன் கொண்டிருந்த விசாலமான அணுகுமுறையே இப்படிப்பட்ட ஒரு இசை சந்திப்பு சாத்தியமாகக் காரணமாக இருந்தது. ஹிந்துஸ்தானியில் பல வேறுபட்ட இசைக்கருவிகளுக்கிடையிலான ஜூகல்பந்திகள் சாத்தியமாகியுள்ளன. நான் கேட்டு அனுபவித்த முதல் ஜூகல்பந்தி அனுபவம் ஷிவ்குமார் ஷர்மாவும் (சந்த்தூர்) ஹிரபிரஸாத் சௌராஸி யாவும் (புல்லாங்குழல்)இணைந்து கொடுத்த ஒரு எல்.பியைக் கேட்டதுதான்.

தவிரவும் ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் அளவுக்கு கர்நாடக இசைக்கலைஞர்களின் “வாய்ஸ் கல்ச்சர்” இல்லை என்ற கருத்தும் ஜெயராமனுக்கு உண்டு. இசைக்கான மரியாதையை விட பக்திக்கான மரியாதை கர்நாடக சங்கீதத்தில் அதிகம் உண்டென்ற கருத்தும் கொண்டவர் அவர். அதிகமும் பிரதியுடன் பிணைக்கப்பட்டுள்ள கர்நாடக சங்கீதத்தின் நிலைமையை விமர்சனம் செய்பவராகவுமிருக்கிறார். பக்தியிலிருந்து விடுதலையடைந்தால்தான் கர்நாடக சங்கீதம் நவீனமாக முடியும் என்று தமிழவன் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்வது தவறில்லை.

Posted in Uncategorized | Tagged: , , , , | Comments Off